நவம்பர் மாதம் தொடங்கியது முதல்
தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.

நேற்று (நவம்பர் 25-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (நவம்பர் 26-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.120 குறைந்து, ரூ.7,080-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.720 குறைந்து ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஆறு நாட்களுக்கும் மேலாக உயர்ந்துவந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்துவருவதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

.



Source link