இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நாளை பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.

கடந்த 10 ஆண்டுகளில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போதைய தொடரில் வெல்ல ஆஸ்திரேலியா அணி தீவிர முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

கடைசியாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அணி 2014 – 15 ஆம் ஆண்டில் தான் வென்றது. மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் முக்கிய பங்களிப்பை செலுத்துவார்கள் என ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் போட்டியில் ரோகித் சர்மா இல்லாத நிலையில், பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க:
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை… எங்கே? எப்படி பார்க்கலாம்?

விளம்பரம்

ஆனால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது விளையாடிய தொடர்களின் முதல் போட்டியில், இந்தியாவின் ஆட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்றே கூறலாம். கடந்த 77 ஆண்டுகளில் இந்தியா 13 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு முறை மட்டும்தான் இந்தியா முதல் போட்டியில் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி 1947, 1967, 1977, 1981, 1985, 1991, 1999, 2003, 2007, 2011, 2014, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் 2018 ஆம் ஆண்டில் விராட் கோலியின் கேப்டன்சியில் மட்டும் தான் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 1985, 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் டிரா செய்துள்ளது. மற்ற 10 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைதான் தழுவியுள்ளது.

விளம்பரம்
யாரும் அறிந்திராத துளசி பூவின் ஆரோக்கிய நன்மைகள்.!


யாரும் அறிந்திராத துளசி பூவின் ஆரோக்கிய நன்மைகள்.!

இந்த நிலையில் தான் இந்திய அணி நாளை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஏற்கனவே நியூசிலாந்துடன் நடைபெற்ற தொடரில் இந்திய அணி தோல்வியடைந்திருப்பதால், இந்திய அணி வீரர்கள் இந்த தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.



Source link