தலைநகர் டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் காற்று மாசு உச்சத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பல பள்ளிகள், மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செய்து வருகின்றன. ஒருவேளை உங்கள் வீட்டு குழந்தைகள் ஆன்லைனில் கல்வி கற்கிறார்கள் என்றால் அல்லது வேறு ஏதேனும் கல்வி சார்ந்த பணிகளுக்கு அவர்களுக்கு ஆண்ட்ராய்டு டேப்லெட் வாங்கிக் கொடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் ரூ.15,000-க்குள் கிடைக்கும் சில பட்ஜெட் ஆண்ட்ராய்டு டேப்லெட்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

ஆன்லைன் கிளாஸ்களுக்கு ஏற்ற சிறந்த ஆண்ட்ராய்டு பட்ஜெட் டேப்லெட்ஸ்கள் இங்கே…

விளம்பரம்

ஒப்போ பேட் ஏர் (OPPO Pad Air):

இந்த பேட் ஏர் மாடல் அதன் பெயருக்கு ஏற்ப வெறும் 440 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ள டேப்லெட் ஆகும். இதில் 7,100mAh பேட்டரி இருக்கிறது. இந்த டேப்லட் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மேலும் விரிவாக்கிக் கொள்ளலாம். ஒப்போ பேட் ஏர் 10.3-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2000 x 1200 பிக்சல்ஸ் மற்றும் 60Hz ரெஃப்ரஷ் ரேட்டில் 2கே ரெசல்யூஷனை வழங்குகிறது.

விளம்பரம்

லெனோவா டேப் எம்10 எஃப்எச்டி பிளஸ் (Lenovo Tab M10 FHD Plus):

லெனோவாவின் Tab M10 FHD Plus ஆனது, 2K ரெசல்யூஷனுக்கான சப்போர்ட்டுடன் சிறந்த மற்றும் டீசன்ட்டான ஸ்கிரீனை யூஸர்களுக்கு வழங்குகிறது. இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 680 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட்7,700mAh பேட்டரியுடன் லோட் செய்யப்பட்டுள்ளது, இது பல மணி நேர வகுப்புகளில் பயன்படுத்த போதுமானதாக இருக்கும்.

ரெட்மி பேட் எஸ்இ (Redmi Pad SE):

ரெட்மி நிறுவனத்தின் Pad SE டேப்லெட்டானது 11-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை பெறுகிறது மற்றும் FHD+ ரெசல்யூஷனை சப்போர்ட் செய்கிறது. இந்த டேப்லெட்டில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன், ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டின் அடிப்படை மாடலின் விலை ரூ.12,999 ஆகும். இதன் பின்புறத்தில் 8MP கேமராவும், முன்புறத்தில் 5MP ஷூட்டரும் உள்ளது. இது டால்பி அட்மோஸ்-டியூன்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதில் 8,000mAh பேட்டரி உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவில் ரெட்மி A4 5G மலிவு விலை ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்த சியோமி….

ஹானர் பேட் எக்ஸ்8ஏ (HONOR Pad X8a):

Snapdragon 680 ப்ராசஸரில் இயங்கும் இந்த டேப்லெட்டானது 90Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேவைப் பெறுகிறது, இது ஆண்ட்ராய்டு 14-ல் இயங்குகிறது. இந்த டேப்லெட் மெட்டல் பாடியைக் கொண்டுள்ளது, 500 கிராமுக்கும் குறைவான எடை கொண்டது. 8,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. நீங்கள் X8a-வை சிங்கிள் 4ஜிபி + 128ஜிபி வேரியன்ட்டை ரூ.12,999 என்ற விலையில் வாங்கலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.10,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் OnePlus 12 மொபைல்…!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 (Samsung Galaxy Tab A9):

நீங்கள் ஒரு பெரிய டிஸ்ப்ளேவை விரும்பவில்லை என்றால், Tab A9 ஆனது 8.7-இன்ச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. மேலும் இது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜைக் கொண்டிருப்பதுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்டை பயன்படுத்துகிறது. 15W சார்ஜிங் ஸ்பீடை சப்போர்ட் செய்யும் 5,100mAh பேட்டரி பேக்கையும் இது கொண்டிருக்கிறது.

.



Source link