பிரபல இசையமைப்பாளரும், ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியினர் தங்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அறிவித்தனர். இது தொடர்பான பதிவு ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான், தனது X தளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

விளம்பரம்

அதில், தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்திருந்த அவர், கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் பதிவிட்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விவாகரத்து செய்திகளில் தற்போது ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்தியும் இணைந்தது ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இணையத்தளத்தில் இந்த விவாகரத்து செய்தி மிகப்பெரிய பேசுபொருளானது.

விளம்பரம்

அதுமட்டுமில்லாமல், ஏ.ஆர். ரஹ்மான் இசை குழுவில் இடம் பெற்றுள்ள பெண் இசைக்கலைஞரான மோகனிடே என்பவர் தனது கணவரை பிரிவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். உடனே ரஹ்மானுக்கு அந்த கலைஞருக்கும் உள்ள தொடர்புதான் விவாகரத்துக்கு காரணமா என பலவாறு முடிச்சு போட்டு செய்திகள் வெளியாக தொடங்கியது.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு பிரிவு தொடர்பாக பல்வேறு சமூக வலைதளங்களில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உடனடியாக நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூ டியூபர்களுக்கும் நோட்டீஸ்மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விளம்பரம்

News18

இந்த நிலையில், தனது கணவர் குறித்து அவதூறு பரப்பவேண்டாம் என்றும், அவர் அற்புதமான மனிதர் என்றும் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி பேசியுள்ள ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் பேசிய சாய்ரா பானு கூறுகையில், “ஏ.ஆர். ரஹ்மான் மீதும் அவதூறு பரப்பாதீர்கள், அவர் ஒரு அற்புதமான மனிதர், அவரை போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்கமுடியாது. கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நலம் சரி இல்லாததால் தற்போது நான் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். அதன் காரணமாகத்தான் ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள விரும்பினேன். என் உடல்நல குறைவுதான் இந்த முடிவுக்கு காரணம்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
AR Rahman Notice | இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை.. யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி நோட்டீஸ்..!!

அவருக்கு யாருடனும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.. அவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது, அந்த அளவுக்கு சிறந்த மனிதர் அவர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன் அவரும் கூட அதே அளவு காதலை வைத்திருக்கிறார். நாங்கள் இருவரும் தற்போதைக்கு எங்கள் இருவருக்கும் தேவைப்படும் பிரேக் தான் எடுத்துள்ளோம், இன்னும் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இங்கு எனது சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் சென்னைக்கு திரும்புவேன். தயவு செய்து அவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

சாய்ரா பானுவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் அவர் குறிப்பிட்டது போன்று இன்னும் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

.





Source link