உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவு கூருவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருவதும் தடை செய்யப்பட்ட அமைப்பை  நினைவு கூருவதும் ஒன்றல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர், இது தொடர்பில் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அரசு ஒரு போதும் தடையாக இருக்காது appeared first on Thinakaran.



Source link