Indigo நிறுவனம் மீடியா ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மான Spotify உடன் இணைந்து உள்ளூர் மற்றும் வெளியூர் விமான பயணிகளுக்கு ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் Spotify பிரீமியம் மெம்பர்ஷிப் டிரையல் திட்டத்தை இலவசமாக பெறலாம். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
இந்தியாவிலேயே மிகக் குறைந்த செலவில் விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான இன்டிகோ அதன் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு ஒரு புதிய ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பல்வேறு விதமான ஸ்ட்ரீமிங் மீடியாக்களான மியூசிக், பாட்கேஸ்ட் மற்றும் ஆடியோ புக் போன்றவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கொடுக்கும்.
ஸ்பாட்டிஃபை உடன் இணைந்து இண்டிகோ அதன் விமான பயணிகளுக்கு இந்த இலவச சப்ஸ்கிரிப்ஷனை பிளைட் புக்கிங்கின்போது வழங்குகிறது.
இலவச ஸ்பாட்டிஃபை சப்ஸ்கிரிப்ஷன்: வேலிடிட்டி
பிளைட் புக்கிங் செய்யும்போது 4 மாதத்திற்கான இலவச ஸ்பாட்டிஃபை பிரீமியம் இண்டிவிஜுவல் திட்டத்தை இண்டிகோ நிறுவனம் வழங்குகிறது. உள்ளூர் அல்லது வெளியூர் விமானங்களுக்கு இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது மொபைல் அப்ளிகேஷன் பயன்படுத்தி புக்கிங் செய்யும் நபர்கள் இந்த ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் யூசர்கள் தாங்கள் சேரும் இடத்தின் அடிப்படையில் ஒரு பிளே லிஸ்ட்டை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது. உதாரணமாக வாரணாசி அல்லது மும்பைக்கான ஒரு பிளே லிஸ்ட். இந்த ஆஃபர் அக்டோபர் 3, 2025 வரை செல்லுபடி ஆகும். ஆனால் ஏற்கனவே ஸ்பாட்டிஃபை சப்ஸ்கிரிப்ஷன் கொண்டவர்களுக்கு இந்த இலவச ட்ரையல் பெறுவதற்கு தகுதி பெற மாட்டார்கள்.
டிரையல் காலம் முடிவடைந்த உடன் ஒவ்வொரு மாதமும் இன்டிவிஜுவல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்டோமேட்டிக்காகவே 119 ரூபாய் சார்ஜ் செய்யப்படும். எனினும் இந்த சப்ஸ்கிரிப்ஷனை ஒருவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கேன்சல் செய்யலாம்.
இதையும் படிக்க:
எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேற விரும்புகிறீர்களா…? உங்கள் கணக்கை நீக்க உதவும் எளிய வழிமுறைகள்…
இலவச ஸ்பாட்டிஃபை சப்ஸ்கிரிப்ஷன் பெறுவது எப்படி?
படி 1: உங்களுடைய பிளைட் புக்கிங்கிற்கான PNR-ஐப் பெற்றவுடன், உங்களுடைய பதிவு செய்யப்பட்ட இமெயில் இன்பாக்ஸை திறக்கவும்.
படி 2: அதில் ஸ்பாட்டிஃபை ஆஃபர் குறித்த ஒரு மெசேஜ் இருப்பதை காண்பீர்கள். அந்த இமெயிலை திறந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்கவும்.
படி 3: அதில் ஸ்பாட்டிஃபை ஆஃபர் பேஜுக்கான ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து ஸ்பாட்டிஃபை ஆஃபர் பேஜுக்கு செல்லுங்கள். அங்கு ஆஃபரை பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும்.
இதையும் படிக்க:
வாட்ஸ்அப் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்வது எப்படி? – எளிய வழிமுறைகள் இதோ….
படி 4: ஆஃபரை பெறுவதற்கு குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் நீங்கள் அதனை பயன்படுத்த வேண்டும். மேலும் உங்களுடைய பிளைட் புக்கிங் ஆக்டிவாகவே இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதனை கேன்சல் செய்து விட்டால் ஸ்பாட்டிஃபை ஆஃபருக்கான தகுதியையும் இழந்து விடுவீர்கள்.
.