தங்கத்தின் விலை நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (26) கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கமைய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை,நேற்று 2,10,000 ரூபாவாக காணப்பட்டது.

22 கரட் ஒரு பவுண் தங்கம் 1,93,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,14,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,97,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,622.75 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

The post தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி; 22 கரட் 1,93,000 ரூபாவாக பதிவு appeared first on Thinakaran.



Source link