ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் -கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.

விளம்பரம்

இந்திய அணி சுமார் 2 மாத காலம் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு வேளை தொடரை இழந்தாலோ மிக குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள ரோஹித் சர்மா இந்தியாவில் இருப்பதால் அவர் முதல் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இதுவரை ஈடுபடவில்லை.

விளம்பரம்

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாதது குறித்து சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

இந்திய அணிக்கு கேப்டன் தேவை என்பதால் ரோஹித் சர்மா விரைவில் அணியில் இணைவார் என்று நம்புகிறேன். அவருக்கு வெள்ளிக்கிழமை இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் அவர் உறுதியாக முதல் டெஸ்டில் பங்கேற்பார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க – IPL | ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் “குட்டி” வீரர்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

விளம்பரம்

அவரது இடத்தில் நான் இருந்திருந்தால் முதல் டெஸ்டில் விளையாட ஆஸ்திரேலியா புறப்பட்டிருப்பேன். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு கேப்டன் தேவை. இதனை அவர் கவனத்தில் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

.



Source link