தென் தமிழகத்தில் காரச்சேவு, சீவல், மிக்சர் போன்ற பலகாரங்கள் புகழ்பெற்றவை. விருதுநகர் மாவட்டத்தில் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாத்தூரை நோக்கினால் திசைக்கு ஓர் சேவுக்கடை இருப்பதைக் காணலாம்.

உள்ளூர் பலகாரங்கள் பட்டியலில் சாத்தூர் சேவு தனக்கான இடத்தை உறுதி செய்திருப்பதே இதற்கு காரணம். இதமான காரத்துடன், மொறுமொறுப்புடன் இருக்கும் காரணத்தாலேயே சாத்தூர் சேவு தனிச்சுவை பெறுகிறது. தனிச்சுவைக்கு சாத்தூரின் வைப்பாற்று நீரும், விருதுநகர் சுற்றுவட்டாரத்தில் விளையும் சம்பா மிளகாய் வத்தலும் முக்கிய காரணிகளாக உள்ளது.

விளம்பரம்

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, காயம், மிளகு, கடலை எண்ணெய் இவற்றின் கூட்டணியில் உருவாவது தான் சாத்தூர் சேவு. கடலை மாவினை எடுத்து அதோடு மேற்சொன்ன சேர்மானப் பொருட்களைச் சேர்த்து நன்கு பிசைந்து, கொதிக்கும் எண்ணெய்யில் பிழிந்து பொன்நிறமாகப் பக்குவமாகப் பொறித்து எடுப்பது தான் சாத்தூர் சேவின் தயாரிப்பு முறை.

இதையும் படிங்க: ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த 7 கண் மடை… கந்தக பூமியின் கல்லணை பற்றித் தெரியுமா…

இது தவிர பெரிய நிறுவனங்கள் பல இயந்திரங்களைச் சேவு தயாரிப்பில் அறிமுகம் செய்து இருந்தாலும், சாத்தூர் பகுதியில் பாரம்பரிய முறையில் கைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவதும் சுவைக்கு மற்றொரு காரணியாக உள்ளது. அதனாலேயே நூற்றாண்டு கண்ட நன்கு வளர்ச்சி பெற்ற சேவு விற்பனையாளர்கள் பலர் இருந்தும் இன்றும் பலர் பாரம்பரியத் தயாரிப்பு முறையைத் தான் கடைப்பிடிக்கின்றனர்.

விளம்பரம்

இதனால் தான் சாத்தூர் சேவு நூற்றாண்டு கடந்தும் பேசப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், காமராஜர் போன்றோர் கூட சாத்தூர் சேவை பிரியப்பட்டு உண்டது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link