– உழவு இயந்திரம் புரண்டதில் அனர்த்தம்
– ஏனையோரைத் தேடும் பணி தீவிரம்

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திரம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.

இச்சோக சம்பவம் நேற்று (26) மாலை காரைதீவில் இடம்பெற்றது.

பின்னர் கல்முனை பொதுமக்கள், மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மீட்புப்பணியில்போது அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் இந்த விபத்தில் மத்ரஸா மாணவர்கள் உட்பட உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் என 06 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அதில் இருவரின் சடலங்கள் இன்று (27) மீட்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, ஏனையோரைத் தேடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாறுக் ஷிஹான்

The post வெள்ளத்தில் சிக்கிய 11 மத்ரஸா மாணவர்கள் appeared first on Thinakaran.



Source link