தமிழ் சினிமாவில் வரும் எண்ணற்ற பாடல்கள் காலங்கள் பல கடந்து போனாலும் இன்றும் மக்கள் கேட்கும் பாடலாக உள்ளது. அப்படி மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றார் போலவும், துவண்டு விழும் நேரங்களில் தூக்கிவிடும் ஊன்றுகோலாய் எண்ணற்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வரும் நபர் கண்ணதாசனாக தான் இருக்கும். இவரின் பாடல் வரிகள் என்றும் அழியாத ரகசியத்தை தன்னுள் அடங்கியவை. நடிப்பின் மேல் கொண்ட தீரா காதலால் தனது 16 வயதில் சென்னைக்கு ஓடிவந்தவர் கண்ணதாசன். நடிப்பின் மீது ஆசை கொண்டு வந்த அவருக்கு முதலில் கிடைத்தது எழுதக்கூடிய வாய்ப்பு தான்.
பல படங்களில் இவர் நடித்தும் உள்ளார். கண்ணதாசன் முதன் முதலில் எழுதியது ‘கன்னியின் காதலி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடல். சுமார் 4500 படங்களுக்கு பாடல்கள் எழுதிய கண்ணதாசன் 6 படங்களை தயாரித்துள்ளார். மேலும், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். கண்ணதாசன் பல படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார், மேலும் 7 பத்திரிகைகளில் ஆசிரியர், எழுத்தாளர் போன்ற முக்கிய பொறுப்புக்களையும் வகித்துள்ளார். இவையனைத்தையும் தனது 54 வயதிற்குள் செய்தவர் கண்ணதாசன்.
உலகிலேயே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிக் கொண்ட ஒரே நபர் கண்ணதாசனாகத்தான் இருக்கும். தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இதை அவர் எழுதிவிட்டாராம். அவர் இறுதியாக எழுதிய பாடல் ‘மூன்றாம் பிறை’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’ பாடல். கண்ணதாசனிடம் ஒரு பாடலின் காட்சியை விவரித்துவிட்டால், குறைந்தபட்சம் 30 நிமிடங்களில் அந்த பாடலை எழுதிக் கொடுத்துவிடும் திறமை கொண்டவராம். பல சூப்பர் ஹிட் சினிமா பாடல்களை எழுதிய கண்ணதாசன் இன்றும் கேட்டு மகிழும் பல ஆன்மீக பாடல்களும் எழுதியுள்ளார். இவரது ஆன்மீக பாடல்கள் பல மக்கள் மத்தியில் கேட்கப்படும் புகழ்பெற்ற பாடல்கள்.
எண்ணிலடங்கா ஆன்மீக பாடல்களை எழுதிய கண்ணதாசனிடம் ஒருவர் இத்தனை புகழ்பெற்ற பாடல்களை எழுதும் நீங்கள், மிகவும் சுருக்கமாக மகாபாரத கதையை ஒரு பாட்டுக்குள் வைத்துவிட முடியுமா? என்று சவால்விட, ஏன் முடியாது? என்று அவர் விடுத்த சவாலை ஏற்று கொண்ட கண்ணதாசன், ரத்தின சுருக்கமாக நான்கே வரிகளில் மகாபாரத கதையை தனது பக்தி பாடல் ஒன்றில் வைத்து பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். மகாபாரதத்தை 4 வரிகளில் கொண்ட அந்த பாடல் எது தெரியுமா?
இதையும் படிங்க:
ரிலீசுக்கு முன்பே 1000 கோடி வசூல்.. மாஸ் காட்டும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2..!!
கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டி.எம். சௌந்தராஜன் பாடிய ‘புழங்குகள் கொடுத்த மூழ்கிலே’ என்ற கிருஷ்ணனை குறித்த பக்தி பாடலில் ‘பாஞ்சாலி புகழுக்காக தன் கை கொடுத்தான்.. அந்த பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான்.. பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கு கொடுத்தான்.. நாம் படிப்பதற்கு கெதை எனும் பாடம் கொடுத்தான்” என்று வரிகளைக் கொண்டு மகாபாரத காவியத்தை வெறும் நான்கே வரிகளில் சேர்த்து ஆகச்சிறந்த கவிஞன் கண்ணதாசன் என்பதை நிரூபித்திருப்பார்.
.