ஒரு பொருளை முதலில் வாங்கிவிட்டு அதற்கான பேமெண்டை பிறகு செலுத்துவதற்கான Buy Now Pay Later திட்டம் மக்களிடையே அதிக பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேமெண்ட் ஆப்ஷன் சௌகரியமானதாக இருந்தாலும் பணம் செலுத்தி பொருள் வாங்கும் வழக்கத்தோடு ஒத்துப் போகிறதா என்பதை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியம். அந்த வகையில் Buy Now Pay Later பயன்படுத்துவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்

Buy Now Pay Later (BNPL) சேவை எவ்வாறு வேலை செய்கிறது?:

BNPL திட்டத்தில் முதலில் வாங்க நினைக்கும் பொருள்களை காசு செலுத்தாமல் வாங்க முடியும். பின்னர் அதற்கான தொகையை எந்த ஒரு வட்டியும் இல்லாமல் செலுத்தலாம். ஆனால் இதற்கு சரியான நேரத்தில் தொகையை செலுத்துவது அவசியம். எனினும் தாமதமாக பேமெண்ட் செலுத்தினால் அதற்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த இடத்தில் நமக்கு நாமே கேட்டுகொள்ள வேண்டிய கேள்விகள்:

  • BNPL சேவை வட்டி இல்லாததா அல்லது இதில் மறைமுக கட்டணங்கள் ஏதேனும் உள்ளனவா?

  • பணத்தை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு மற்றும் டெட்லைன்கள் என்ன?

இதையும் படிக்க:
தங்கம் மீதான சுங்கவரி குறைப்பு… 10 கிராம் விலை ரூ.15,900 ஆக குறைவு!

BNPL சேவையை பயன்படுத்தி உடனடியாக எந்த ஒரு பொருளையும் நம்மால் வாங்க முடியும். ஆனால் அதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். அது எந்த விதத்திலும் பொருளாதார நிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை ஒழுங்காக கையாள விட்டால் பின்னர் கடன் வலையில் மாட்டிக் கொள்ள நேரலாம்.

விளம்பரம்

கால அளவு மற்றும் கட்டணங்கள்: சேவையை பயன்படுத்துவதற்கு முன்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்க வேண்டும். ஒருவேளை பேமெண்ட்டுகளை சரியான நேரத்திற்கு செலுத்த தவறி விட்டால் அதனால் கூடுதல் கட்டணங்கள் செலுத்த நேரிடும். ஒரு சில சேவைகள் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணத்தை வசூல் செய்யலாம். ஒருவேளை பொருள்களை திருப்பி கொடுத்து விட்டால் அதற்கான ரீஃபண்ட் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

விளம்பரம்

கிரெடிட் ஸ்கோர்: BNPL சேவைகளை பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் எந்த ஒரு கிரெடிட் சரிப்பார்ப்பும் செய்யப்படுவது இல்லை. எனினும் பேமெண்ட்டுகளை செலுத்த தவறிவிட்டால் அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.  எதிர்காலத்தில் லோன் அல்லது கிரெடிட் கார்டு போன்றவை வாங்கும் பொழுது இதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க:
மாதம் ரூ.10,000 செலுத்தினா 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி கிடைக்குமா.. அது என்ன சூப்பர் திட்டம்!

BNPL சேவை எப்பொழுது ஒரு நல்ல ஆப்ஷன் ஆக இருக்கும்?:

விளம்பரம்
  • பணத்தை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தால்

  • வாங்கும் பொருள் அத்தியாவசியமானதாக இருந்தால்

  • சேவை குறித்த விதிகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு ஆய்வு செய்து புரிந்து கொண்ட பிறகு இந்த சேவையை பயன்படுத்தலாம்.

BNPL சேவையை எப்பொழுது தவிர்க்க வேண்டும்?:

  • ஏற்கனவே கடன் வலையில் இருக்கும் பொழுது இந்த சேவையை பயன்படுத்த வேண்டாம்.

  • அத்தியாவசியம் இல்லாத ஒரு பொருளை வாங்குவதற்காக BNPL சேவையை பயன்படுத்த வேண்டாம்.

  • தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கு அதிக கட்டணங்கள் அல்லது அபராதங்கள் வசூலிக்கப்பட்டால் இந்த சேவை சரியானதாக இருக்காது.

பெண்களின் கால்சியம் அளவை அதிகரிக்க உதவும் 7 உணவுகள்.!


பெண்களின் கால்சியம் அளவை அதிகரிக்க உதவும் 7 உணவுகள்.!

Buy Now Pay Later என்பது சௌகரியமான ஒரு பேமெண்ட் ஆப்ஷனாக இருந்தாலும் இதனை பொறுப்புடன் கையாளுவது அவசியம்.

.



Source link