சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘புஷ்பா’ திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமாக ‘‘புஷ்பா 2’ உருவாகியுள்ளது. ‘புஷ்பா 2’ படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை விட 2ம் பாகம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘புஷ்பா 2’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் இப்போ, அப்போ என தள்ளி போய்க்கொண்டே இருந்து அதன் பின் ஒருவழியாக டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. முதல் பாகத்தில் சமந்தாவின் கவர்ச்சி ஆட்டம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதே போல் 2ஆம் பாகத்திலும் ஒரு கவர்ச்சி குத்தாட்டத்தை போட்டுள்ளார் இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா. இந்த பாடலை இன்று படக்குழு வெளியிடுகின்றனர். அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீலீலாவின் நடன அசைவுகளை ஒன்றுசேர்த்து பார்க்க ரசிகர் பட்டாளமே காத்துக்கிடக்கிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
Top 10 Horror Movies | அதிக IMDb ரேட்டிங் கொண்ட மிரளவைக்கும் டாப் 10 பேய் படங்களை இந்த ஓடிடி தளங்களில் பாருங்க!

படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரிலீசுக்கு முன்பே ‘புஷ்பா 2’ திரைப்படம் 1000 கோடி வசூல் செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் திரையரங்க உரிமை மட்டும் ரூ. 660 கோடிக்கும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 250 கோடிக்கும் விலை போயுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் ரிலீசுக்கு முன்பே 1000 கோடி வசூலித்து படத்தின் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு தயாராகியுள்ளது ‘புஷ்பா 2’ திரைப்படம்.

விளம்பரம்

.

  • First Published :



Source link