கோவையில் மரத்திலான பொருட்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆடைகள் குஜராத் மேளாவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு கைத்தறி மூலம் நெய்யப்பட்ட மூங்கில் புடவை, வாழை நார் புடவை போன்ற பல வகைப் புடவைகளும், ஆண்களுக்குத் தேவையான உடைகளும் உள்ளது.

மேலும் 20 ரூபாய் முதல் மரத்திலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த கண்காட்சியில் உள்ள மாரியப்பன் கூறுகையில், “நான் குஜராத் மேளாவிலிருந்து கோயம்புத்தூர் ராம் நகரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி டிசம்பர் 8 வரை நடைபெறுகிறது. இங்கு 18 ஸ்டேட்களில் இருந்து அங்கு என்னென்ன பேமஸான பொருட்கள் உள்ளதோ அதை எடுத்து வந்து இங்கு கண்காட்சிக்கு வைத்திருக்கிறோம்.

விளம்பரம்

இங்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள சாரன் பொருள், மரப்பொருள், அக்குபஞ்சர் ஐட்டம், சென்னப்பட்டின டாய்ஸ், குர்தாஸ், பெட் சீட்ஸ், ஃபேன்சி டாப்ஸ், ஹேண்ட் லூம் சாரீஸ் இந்த மாதிரி பொருட்களை அந்தந்த ஊர்களில் எது ஃபேமஸான பொருட்களோ அதை இங்க கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைத்திருக்கிறோம்.

இதையும் படிங்க: Salem Thattu Vadai Set: தூத்துக்குடியில் சேலத்து பேமஸ்… மக்களைக் கவர்ந்த தட்டுவடை செட் வெரைட்டிஸ்…

இந்த கண்காட்சி ராம்நகர் கமலம் துரைசாமி மஹாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும், இங்கு மரப்பொருட்களில் ஸ்பூனிலிருந்து பெரிய பெரிய பொருட்கள் மரத்திலானவை இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்கள் 20 ரூபாய் முதல் இங்கு உள்ளது.

விளம்பரம்

பெண்களுக்கு டாப்ஸ் 250 ரூபாய் முதல் இங்கு உள்ளது. பெட் சீட்கள் எடுத்தால் 250 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை உள்ளது. பெரிய சைஸ் பெட் சீட் களும் இங்கே உள்ளது. இது மட்டும் இல்லாமல் ஹேண்ட்லூம் டாப்ஸ் எடுத்தால் 650 ரூபாய் முதல் உள்ளது.

சாரீஸில் ஹேண்ட்லூம் எடுத்தால் குஜராத்தி காட்டன், வாழை நார் மற்றும் மூங்கில் நார் புடவைகள் உள்ளது. புடவைகள் அனைத்தும் 320 முதல் 6000 ரூபாய் வரை உள்ளது. ஆண்களுக்கு சர்ட் எடுத்தால் மீரட் குர்தா, காக்ராச் சோலி, குழந்தைகளுக்குத் தேவையான காக்ரோச் சோலி, குழந்தைகளுக்குத் தேவையான சர்ட், பேண்ட் அனைத்தும் இங்கே செட்டாக கிடைக்கும்.

விளம்பரம்

இதையும் படிங்க: Sattur Karasev: செய்முறை, சேர்மானமெல்லாம் ஒன்னா இருந்தாலும் டேஸ்ட் வேற… சாத்தூர் சேவு சீக்ரெட் இது தான்…

ஃபேமிலியாக வந்து அனைத்தும் வாங்கிச் செல்லும் வகையில் பல வெரைட்டீஸ் நிறையா உள்ளது. வாருங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link