இந்தியாவின் பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையானது ஜியோ 5ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதன் கீழ், நீங்கள் மிகக் குறைந்த விலையில் ஜியோ ஏர்ஃபைபருக்கான அக்சஸ்களை பெறுவீர்கள். இதற்காக ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஏர்ஃபைபர் இணைப்பை 50 நாட்களுக்கு வெறும் ரூ.1,111 விலையில் வழங்குகிறது. 50 நாட்கள் என்பது ஒன்றரை மாதங்களைவிட அதிகம் என்பதால், இவ்வளவு பெரிய ஆஃபருக்கான விலை ரூ.1,111 ஆகும்.
இது தவிர, இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 இன்ஸ்டலேஷன் கட்டணத்தை வசூலிக்காது. இந்த திட்டத்தில், யூசர்கள் 1 Gbps வரை அதிவேக இன்டர்நெட் ஸ்பீட் உடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ் மற்றும் ஜியோ சினிமா போன்ற பல OTT பிளாட்ஃபார்ம்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன்களை எந்த இடையூறும் இல்லாமல் எளிதாகப் பெறுவார்கள். இந்த காரணத்திற்காக, இந்த சலுகை அதிகமானவர்களுக்கு சிறந்த சலுகையாக பார்க்கப்படுகிறது. எனவே, நீங்கள் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தாலும், கேமிங் செய்தாலும் அல்லது வீட்டில் இருந்து வேலை செய்தாலும், இந்த இன்டர்நெட் ஸ்பீட் ஆனது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்.
இதுவரை, தீபாவளி சலுகையின் கீழ் 3, 6 மற்றும் 12 மாத திட்டங்களுடன் புதிய ஏர்ஃபைபர் இணைப்புக்கான இன்ஸ்டலேஷன் கட்டணத்தை ஜியோ தள்ளுபடி செய்தது. இதன் மூலம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க விரும்புகிறது. இருப்பினும், இந்த புதிய 50 நாள் சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது குறைந்த விலையில் சேவை மற்றும் இலவச இன்ஸ்டலேஷன் இரண்டையும் பெறலாம். இந்த சலுகையின் மூலம் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் ஏர்ஃபைபரை இந்தியா முழுவதும் பரவலாகக் கிடைக்கச் செய்துள்ளது.
ஜியோவின் ஏர்ஃபைபர் சேவை நாடு முழுவதும் பல பகுதிகளில் கிடைக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த வகையான இணைய சேவைக்கு அதிக எண்ணிக்கையிலான யூசர்கள் உள்ளனர். இந்த ஏர்ஃபைபர் சேவையின் மூலம், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1 மில்லியன் வீடுகளை சென்றடையவும் ஜியோ இலக்கு வைத்துள்ளது. ஃபிக்ஸ்டு வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புக்கான விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் புதிய வீடுகளை ஏர்ஃபைபர் சேவையுடன் இணைக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க:
ரெட்மி A4 5G ஆனது ஏர்டெல் 5G நெட்வொர்க்கை ஆதரிக்காது…!! ஏன் தெரியுமா…?
இதற்கிடையில், மலிவு விலையில் 5ஜி போன்களை உருவாக்கும் பணியில் ஜியோ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உபகரண உற்பத்தியாளருடன் இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனமானது அதன் செமிகண்டக்டர் டெக்னாலஜிக்காக அமெரிக்க நிறுவனமான குவால்காம் உடன் இணைந்து செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
.