ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவை வென்றாலும் மகிழ்ச்சியாக இல்லை என்று இந்திய அணியை குறிப்பிட்டு பாகிஸ்தான் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்று புதிய சாதனையை ஏற்படுத்தியது. அதாவது ஆஸ்திரேலிய மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. இருப்பினும் இந்த தொடர் ஊடகங்களில் அதிகமாக பேசப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியை வென்றது குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி கூறியதாவது, “22 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. எங்களை பொறுத்த அளவில் இது மிகச் சிறந்த முன்னேற்றம்.

இதையும் படிங்க – கிராண்ட் மாஸ்டர் செஸ் : தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

ஆனால் இந்த பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா தொடரை யாரும் அதிகமாக பேசவில்லை. எல்லோரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மீதுதான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அதனால் ஆஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்திய போதிலும் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

.

  • First Published :



Source link