2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு இரண்டாயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் லஞ்சம் கொடுத்ததாக, அதானி குழும தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
Also Read:
அமெரிக்கா புகாரில் அதானி பெயர் இல்லை! கிரீன் எனர்ஜி விளக்கம்
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள அதானி மற்றும் சாகர் அதானி இல்லத்திற்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், 21 நாட்களுக்குள் நேரில் பதிலளிக்க வேண்டும் என்றும், பதிலளிக்கத் தவறினால், புகாரில் கோரப்பட்ட நிவாரணத்திற்காக இருவருக்கும் எதிராக தீர்ப்பு அளிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.