வீடியோ கால் அனுபவத்தை யூசர்களுக்கு மேம்படுத்திக் கொடுப்பதற்காக வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அப்டேட் பற்றிய தகவல்களை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

பயனாளர்களின் வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் தற்போது ஒரு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. லோ-லைட் மோடை இந்த அப்டேட்டில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக மோசமான வெளிச்சம் கொண்ட சுற்றுச்சூழலில் கூட உங்களால் நல்ல தரமான வீடியோ கால் பேச முடியும். குறைவான வெளிச்சம் உள்ள இடங்களில் வீடியோ கால்கள் பேசும் பொழுது பயனாளர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனைகளை சமாளித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல் இணைவதற்கு இந்த அம்சம் உதவுகிறது.

விளம்பரம்

ஒரு சில பயனாளர்கள் ஏற்கனவே புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்ரவுண்ட் ஆப்ஷன்களை கண்டுபிடித்திருந்தாலும் இந்த லோ லைட் மோட் டார்க் செட்டிங்ஸில் நல்ல தெளிவான வீடியோவைக் காண முடியும்.

இதையும் படிக்க:
அழைப்பிதழ் மோசடியால் பணத்தை சுருட்டும் ஹேக்கர்கள்… வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு அலெர்ட்

இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனோடு சேர்த்து வீடியோ கால்களுக்கு ஒரு சில ஃபில்டர்கள் மற்றும் பேக்ரவுண்ட் ஆப்ஷன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனாளர் அனுபவத்தை மேம்படுத்தி கொடுக்கும். குறைவான வெளிச்சம் கொண்ட சூழலில் வீடியோ காலிங் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்த லோ லைட் மோட் உதவுகிறது.

விளம்பரம்

வாட்ஸ்அப்பில் லோ லைட் மோடை ஆன் செய்வது எப்படி?:

வீடியோ கால்களை தெளிவாகவும் குறைந்த வெளிச்சம் கொண்ட சூழ்நிலையிலும் கூட தரமான கால்களை பேசுவதற்கு வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு உதவுவதற்காக இந்த லோ லைட் மோடு உதவுகிறது. லோ லைட் மோடை ஆக்டிவேட் செய்வது மிகவும் எளிது.

இதையும் படிக்க:
உங்கள் ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா..? கண்டுபிடிப்பது எப்படி? – முழு விவரம் இதோ!

*முதலில் வாட்ஸ்அப்பை திறந்து கொள்ளுங்கள்.

*ஏதாவது ஒரு நபருக்கு வீடியோ கால் செய்யுங்கள்.

விளம்பரம்

*உங்களுடைய வீடியோவை முழு ஸ்கிரீனுக்கு மாற்றி கொள்ளுங்கள்.

*இப்போது மேல் வலது மூலையில் உள்ள பல்பு வடிவிலான ஐகானை கிளிக் செய்து லோ லைட் மோடை ஆன் செய்யுங்கள்.

*இந்த அம்சம் வேண்டாம் என தோன்றினால் பல்பு வடிவிலான ஐகானை மீண்டும் தட்டினால் போதுமானது

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

*இந்த லோ லைட் மோட் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது. எனினும் இதனை விண்டோஸ் அப்ளிகேஷனில் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு காலிலும் பயனாளர்கள் லோ லைட் மோடை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஏனெனில் அடுத்தடுத்து நீங்கள் செய்யும் வீடியோ கால்களில் இந்த செட்டிங்கை நிரந்தரமாக ஆன் செய்து வைத்திருக்க முடியாது.

விளம்பரம்
ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!


ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!

*விண்டோஸ் அப்ளிகேஷனில் லோ லைட் மோட் இல்லாவிட்டாலும் கூட பயனாளர்கள் தங்களுடைய வீடியோ கால்களில் மேனுவலாக பிரைட்னஸை மாற்றி கொள்ளலாம்.

.



Source link