மாத வருமானத்தை பெற்று தரும் அதே நேரத்தில் அரசு ஆதரவு வழங்கும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு ஆப்ஷனை தேடி வருகிறீர்களா? உங்களுடைய ஓய்வு காலத்திற்கான திட்டமாக இருக்கட்டும், கூடுதல் வருமானத்தை எதிர்பார்த்து முதலீடு செய்வதாக இருக்கட்டும் அல்லது உங்களுடைய சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக எதிர்பார்த்து வந்தாலும் சரி, இந்த தீர்வு உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் அளவைவிட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு பலன்களை தரக்கூடிய ஒரு தபால் நிலைய சேமிப்பு திட்டம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உங்களுடைய எதிர்காலத்தை போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டத்தின் (POMIS) மூலம் வளமாக்குவது எப்படி?:
தபால் நிலையம் வழங்கும் இந்த மாத வருமான திட்டமானது அரசு ஆதரவு பெற்று, நல்ல வட்டி விகிதங்கள் மற்றும் உறுதியளிக்கப்பட்ட மாத வருமானத்தை வழங்குகிறது. உங்களுடைய சேமிப்புகளை நிலையான வருமானமாக மாற்றுவதற்கு இது ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் தேசிய சேமிப்பு திட்டம்(POMIS):
POMIS என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம். இது ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு வருமானத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான சில முக்கியமான விஷயங்கள்:
-
குறைந்தப்பட்ச டெபாசிட்: 1000 ரூபாய்
-
அதிகப்பட்ச டெபாசிட்: 9 லட்சம் ரூபாய் (சிங்கிள் அக்கவுண்ட்) அல்லது 15 லட்ச ரூபாய் (ஜாயிண்ட் அக்கவுண்ட்)
-
கால அளவு – 5 வருடங்கள்
-
வட்டி விகிதம் – ஒரு வருடத்திற்கு 7.4 சதவீதம்
போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் – தகுதி வரம்புகள்
*வயது வந்த பெரியவர்கள்
* ஜாயின்ட் அக்கவுண்டிற்கு மூன்று பெரியவர்கள் வரை
அனுமதிக்கப்படுகிறார்கள்
இதையும் படிக்க:
உங்ககிட்ட பான் கார்டு இருக்கா? கண்டிப்பா இந்த விவரங்களை தெரிஞ்சுக்கோங்க
*சிறார்களுக்கு பதிலாக பாதுகாவலர்கள் அக்கவுண்ட் திறக்கலாம்
*10 வயதை விட அதிகமான சிறார்கள் அவர்களுடைய பெயரிலேயே அக்கவுண்ட்டை தொடங்கலாம்
போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் கால்குலேட்டர்:
மாத வருமானம் = டெபாசிட் தொகை × வட்டி விகிதம் ÷ 12
உதாரணம்:
5 லட்ச ரூபாய்க்கு – ஒவ்வொரு மாதமும் 3083 ரூபாய்
9 லட்சம் ரூபாய்க்கு – ஒவ்வொரு மாதமும் 5550 ரூபாய்
15 லட்ச ரூபாய்க்கு – ஒவ்வொரு மாதமும் 9250 ரூபாய்
குறிப்பு: இந்த ரிட்டன்கள் 5 வருட காலம் முழுவதும் மாறாமல் அப்படியே இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் தொடர்பான முக்கியமான அம்சங்கள்:
*இந்த அக்கவுண்ட்டை வெறும் 1000 ரூபாய் கொண்டு நீங்கள் திறக்கலாம்.
இதையும் படிக்க:
தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
*இதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும். சேமிப்பு கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ECS அல்லது ஆட்டோகிரெடிட்டில் பெறலாம்.
*கோரிக்கை விடுக்கப்படாத வட்டிக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.
*இத்திட்ட மூலமாக பெறப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
*ஒரு வருடம் கழித்து ப்ரீ மெச்சூர் வித்டிராயல் அபராதத்துடன் அனுமதிக்கப்படுகிறது. 1 முதல் 3 வருடங்களுக்கு – டெபாசிட் செய்த தொகையில் 2% குறைக்கப்படும்
3 முதல் 5 வருடங்களுக்கு – டெபாசிட் செய்த தொகையில் 1% குறைக்கப்படும்
*அக்கவுண்ட் மெச்சூரிட்டி ஆனவுடன் உங்களுடைய முதல் தொகை உடனடியாக வழங்கப்படும்.
*அக்கவுண்ட் ஹோல்டர் இறந்துவிடும் பட்சத்தில் நாமினி அல்லது சட்டப்பூர்வமான வாரிசுகள் அக்கவுண்டை மூடலாம். அக்கவுண்டை மூடிய அடுத்த மாதம் வட்டி தொகை வழங்கப்படும்.
இந்திய தபால் நிலையம் வழங்கும் மாத வருமான திட்டம் சிறந்த ஒன்றாக இருந்தாலும் எந்த ஒரு முதலீடு சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அங்கீகாரம் பெற்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. மேலும் இந்தியா போஸ்ட் வழங்கும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் பாலிசிகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உரியவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
.