கோடிக்கணக்கான யூஸர்களை கொண்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிளான் மூலம் ஜியோ யூஸர்கள் இப்போது 10GB டேட்டா வவுச்சரை வெறும் ரூ.11க்கு பெறலாம்.
தினசரி டேட்டா லிமிட் முடிந்துபோன பின்னர் டேட்டா தேவைப்படுவோருக்கு அல்லது குறுகிய காலத்திற்கு கூடுதல் டேட்டா தேவைப்படும் யூஸர்களுக்கு இந்த பிளான் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஜியோ ரூ.11 டேட்டா வவுச்சர்: அம்சங்கள் மற்றும் வேலிடிட்டி
ஜியோ நிறுவனத்தின் ரூ.11 டேட்டா வவுச்சர் யூஸர்களுக்கு 10GB ஹைஸ்பீட் 4G டேட்டாவை வழங்குகிறது. இந்த வவுச்சர் ரீசார்ஜ் செய்யப்பட்டதில் இருந்து ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது 1 மணி நேரம் மட்டுமே வேலிடிட்டி கொண்டது. மேலும் எந்த ஒரு வாய்ஸ் காலிங் அல்லது SMS பலன்களும் இல்லாமல் இன்டர்நெட் அக்சஸில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. விரைவாக அதே சமயம் தற்காலிக டேட்டா அக்சஸ் தேவைப்படும் யூஸ்ர்களுக்கு இது ஒரு சிறந்த பிளான் ஆகும்.
ஜியோ யூஸர்கள் ரூ.11 டேட்டா பேக்கை எப்படி வாங்கலாம்? யாருக்கு கிடைக்கும்?
ரூ.11 டேட்டா பேக் ஜியோவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் யூஸர்களுக்கு கிடைக்கிறது. MyJio ஆப் மூலமாகவோ அல்லது Jio வெப்சைட்டிற்கு விசிட் செய்வதன் மூலமாகவோ இந்த பிளானை எளிதாக வாங்கலாம்.
தற்போதைய பிளானுடன் வவுச்சரை பயன்படுத்துவது…
இந்த ரூ.11 டேட்டா வவுச்சர், பேஸ் பிளான் இல்லாமல் கூட வேலை செய்யும் மற்றும் யூஸர்களுக்கு இன்டர்நெட் அக்சஸை மட்டுமே வழங்குகிறது. உங்களிடம் ஏற்கனவே கால்ஸ் மற்றும் SMS உடன் கூடிய பேஸ் பேக் இருந்தால், கூடுதல் டேட்டா மூலம் தொடர்ந்து குரல் மற்றும் SMS சேவைகளைப் பெற, இதனுடன் வவுச்சரைப் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க:
இலவச போன் கால்ஸ்கள் வேண்டும் என்று கேட்டவர்களுக்கு குட் நியூஸ்… ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்!!!
ஜியோவின் பிற டேட்டா வவுச்சர்கள் என்னென்ன?
-
ரூ.49 வவுச்சர்: வரம்பற்ற 4G டேட்டாவை வழங்குகிறது, இது 1 நாள் செல்லுபடியாக கூடிய பிளான் ஆகும்.
-
ரூ.175 வவுச்சர்: 10GB டேட்டா மற்றும் 10 OTT ஆப்ஸுக்கான அக்சஸ், இது 28 நாட்களுக்கு செல்லுபடியாக கூடிய பிளான் ஆகும்.
-
ரூ.219 வவுச்சர்: 30GB டேட்டா, இது 30 நாட்களுக்கு செல்லுபடியாக கூடிய பிளான் ஆகும்.
-
ரூ.359 வவுச்சர்: இது 30 நாட்களுக்கு செல்லுபடியாக கூடிய பிளான் ஆகும். யூசர்களுக்கு 50GB டேட்டாவை வழங்குகிறது.
இதையும் படிக்க:
ஆண்ட்ராய்டிலிருந்து ஐபோனுக்கு ஃபைல்களை இனி ஈஸியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்…..ஒன்ப்ளஸில் அறிமுகம்!
மேற்கண்டவை தவிர ஜியோ நிறுவனம் 1 GBக்கு ரூ.19ல் தொடங்கி, 12 GBக்கு ரூ.139 வரையிலான பூஸ்டர் பேக்ஸ்களையும் வழங்குகிறது. இந்த பேக்ஸ் உங்கள் அடிப்படைத் திட்டத்தின் அதே காலத்திற்கான வேலிடிட்டியைக் கொண்டிருக்கும்.
.