இன்றளவிலும் ஃபிக்சட் டெபாசிட்டுகள் என்பது உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை தருவதன் காரணமாக பலருடைய முதலீட்டு ஆப்ஷனில் முதன்மையானதாக விளங்குகிறது.
இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டும் அதன் கஸ்டமர்களுக்கு அட்டகாசமான வட்டி விகிதங்களோடு கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் இந்த இரண்டு வங்கிகளும் 3 வருடங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து நீங்கள் ஒரு சரியான முடிவை எடுப்பதற்கு சில விஷயங்களை பற்றி விவாதிக்கலாம்.
SBI மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 வருட கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களை ஆய்வு செய்யும்போது, அவர்கள் வழங்கும் வட்டி விகிதங்கள், குறைந்தபட்ச டெபாசிட் தொகை மற்றும் ப்ரீமெச்சூர் வித்டிராயலுக்கான அபராதத் தொகைகள் போன்ற கூடுதல் அம்சங்களையும் ஆய்வு செய்வது அவசியம். இந்த விவரங்களை தெரிந்து கொள்வது உங்களுக்கான பொருளாதார இலக்குகள் மற்றும் தேவைகளோடு ஒத்துப் போவதற்கான சரியான ஆப்ஷனை தேர்வு செய்ய உதவும்.
SBI FD வட்டி விகிதங்கள் 2024
3 வருட மெச்சூரிட்டி காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்டுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான கால அளவை வழங்குகிறது.
3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான FD வட்டி விகிதம்
பொதுமக்களுக்கு – 6.75% சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.25%
பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 2024
பஞ்சாப் நேஷனல் வங்கி 3 வருட மெச்சூரிட்டி காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பல்வேறு கால அளவுகளை வழங்குகிறது.
2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
பொதுமக்களுக்கு – 7% சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50%
சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.80%
SBI மற்றும் PNB ஃபிக்சட் டெபாசிட்டிற்கான குறைந்தபட்ச தொகை
இந்த இரண்டு வங்கியிலுமே ஃபிக்சட் டெபாசிட்டுக்கு நீங்கள் குறைந்தபட்சமாக 1,000 ரூபாயை செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க:
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயது 62 ஆக அதிகரிப்பு? வைரலாகும் செய்தி உண்மையா?
எந்த வங்கி சிறந்த ரிட்டன்களை வழங்குகிறது?
3 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவோடு ஒப்பிடுகையில் வழக்கமான மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு சற்று அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. எனினும் நேரடியாக வங்கிக்கு சென்று வட்டி விகிதங்களை சரிபார்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில் பாலிசியில் ஏற்பட்டுள்ள அப்டேட் காரணமாக வட்டி விகிதங்களில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கூடுதலாக உங்களுடைய தனிப்பட்ட பொருளாதார முன்னுரிமைகளை ஆய்வு செய்து, அதற்கேற்ற ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்யுங்கள்.
.