தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கடந்தும் தனக்கான மவுசு குறையாமல் நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டே இருப்பவர் நடிகை நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக என்ட்ரி கொடுத்த நயன்தாரா, தொடர்ந்து தனது அழகு, திறமையான நடிப்பு, கிறங்கடிக்கும் கிளாமர் என அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தட்டிச் சென்று குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் பிரபல நடிகையான நயன்தாரா அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார்.

விளம்பரம்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நயன்தாராவுக்கு ரசிகர்கள் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர். 2015ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, கிட்டத்தட்ட 9 வருட காதலுக்குப் பிறகு ஜூன் 9, 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கும் இவர்களின் Couple Goals க்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். சில நாட்களுக்கு முன்பு தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகை நயன்தாரா.

விளம்பரம்

அன்று, ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற பெயரில் ஆவணப்படம் வெளியானது. ஆவணப்படத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, அவரது குடும்பம், அவர் சந்தித்த கஷ்டங்கள், சினிமா வாழ்க்கை, காதல், திருமணம் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்தது குறித்தும் பேசப்பட்டுள்ளது. தனது முந்தைய காதல் குறித்து எங்கும் பேசாத நயன்தாரா, ஆவணப்படத்தில் அது தொடர்பாக பேசியுள்ளார். ஆவணப்படம் வெளியாகி Netflix Top 10 Trending-ல் இடம் பிடித்தது. பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில் அவ்வப்போது விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

விளம்பரம்

News18

‘Nayanthara: Beyond the Fairytale’ ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியான பின் நயன்தாரா நடிகர் தனுஷ் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி இன்ஸ்டாகிராமில் மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு சலசலப்பு ஏற்படுத்தினார். தனது திருமணம் தொடர்பான ஆவணப் படத்தில் ‘நானும் ரவுடிதான்’ பட பாடல் பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என்றும் அதனால் தான் ஆவணப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளியாகவில்லை என்றும் கூறினார். மேலும், ட்ரைலரில் பயன்படுத்தப்பட்ட 3 நொடிக்கும் குறைவான காட்சிக்கு ரூ. 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மிகவும் தவறான செயல் என்றும் பலவாறு சாடியிருந்தார். ஒரு பக்கம் இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சலசலப்பு போய் கொண்டிருக்க மற்றொரு பக்கம் நயன்தாரா தன் பிறந்தநாளை தனது காதல் கணவருடன் முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் 17ம் தேதி மாலை நயன்தாரா பிறந்தநாளை சிறியளவில் கொண்டாடிய வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “அன்றைய பிறந்த நாள் இரவு உணவு உண்மையிலேயே மிகவும் நெருக்கமானதாகவும், சுவையானதாகவும் இருந்தது. இத்தனை வருட பிறந்தநாளில், டெல்லியில் நாங்கள் இருவர் மட்டும்.. உணவகத்தில் 30 நிமிட நீண்ட வரிசையில் காத்திருந்து பிடித்த சென்டர் டேபிள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம், இந்த வீடியோ எடுத்த அந்த ஸ்ட்ரேஞ்சருக்கு நன்றி” என்ற கேப்ஷனுடன் ‘பூங்காற்று புதிரானது..’ என்ற பாடலின் பின்னணியில் நயன்தாராவுடன் உணவு உட்கொண்ட அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

.





Source link