பதுளை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீதி தாழிறக்கமும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பசறை றோபேரி வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையினால் அவ் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், உடப்புசல்லாவை வெளிமடை வீதியில் கர்ஸ்கில் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊவாப்பரணகம பிரதேச செயலக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், பதுளையில் நிலவிவரும் அடை மழை காரணமாக, பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வீதித் தாழிறக்கம் மாத்திரமன்றி வீடுகளும் தாழிறங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா சுழற்சி நிருபர்

The post பதுளையில் பல இடங்களில் மண்சரிவுடன் வீதி தாழிறக்கம் appeared first on Thinakaran.



Source link