ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன ஸ்போர்ட்ஸ் காரை அஜித் ரசித்துப் பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித் குமார் அடுத்தாண்டு மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற அணியின் உரிமையாளராகவும் அவரே திகழ்கிறார். தனது அணியின் பந்தய வீரர்கள் யார் என்று அண்மையில் அஜித் குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார்.

விளம்பரம்

15 ஆண்டுகளுக்குப் பின் ரேஸிங் களத்தில் இறங்கியுள்ள அஜித், பந்தயத்தில் பயன்படுத்தப்படும் உடைகள், கார்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த அஜித் குமார், தனது நிறுவன லோகோ பதித்த காரை ஆவலுடன் பார்த்தார். மேலும், தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய லோகோவையும் அஜித் சுட்டிக்காண்பித்து ரசித்தார். அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

விளம்பரம்

முன்னதாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தில் அஜித் பயன்படுத்துவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

.





Source link