நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது.
நேற்று (நவம்பர் 21ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து, ரூ.7,145-க்கும், ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.57,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 22ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.80 அதிகரித்து, ரூ.7,225-க்கும், ஒரு சவரன் ரூ.640 அதிகரித்து ரூ.57,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க:
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. 2025-ல் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும்?
இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,960-க்கும், ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ.47,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
.