WhatsApp-ல் உங்கள் Chat-ஐ பாதுகாக்க உதவும் வகையில் ‘சீக்ரெட் கோட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அதிகப்படியான யூஸர்களை கொண்டுள்ள செயலி வாட்ஸ் அப்.  தங்களது யூசர்களின் விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சீக்ரெட் கோட் (secret code) என்னும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் உங்களது தனிப்பட்ட சாட்களை மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

விளம்பரம்

வாட்ஸ்அப் யூசர்கள் குறிப்பிட்ட சாட்டை பாதுகாக்க ஃபிங்கர் பிரிண்ட் வசதியையும் பயன்படுத்த முடியும். புதிய சீக்ரெட் கோட் வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் தற்போது கிடைக்கிறது. புதிய சீக்ரெட் கோட் வசதி வாட்ஸ்அப் யூசர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் சாட்டுக்கு லாக் வசதியை பயன்படுத்த முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட சாட்டின் காண்டாக்ட் நேம், அன்லாக் செய்வதற்கு முன் வேறு ஒரு பெயராக தோன்றும்படி மாற்றி அமைக்க முடியும்.

விளம்பரம்

Also Read:
Google Chrome பயனர்களே உஷார்.. அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை.. என்ன தெரியுமா?

அதாவது சாதாரணமாக மொபைல் நோட்டிபிகேஷனில் பார்க்கும் போது வேறு ஒரு பெயராகவும், அந்த கான்வர்சேஷனை யூசர் அன்லாக் செய்தவுடன் அதன் உண்மையான பெயரை காண்பிக்கும் வகையிலும் இருக்கும். இதன் மூலம் யாரேனும் உங்களது லாக் செய்த சாட்டின் நோட்டிபிகேஷனை பார்த்தால் கூட நீங்கள் யாரிடம் சாட் செய்கிறீர்கள் என்று அவர்களால் எளிதில் கண்டறிய முடியாது. மேலும் சீக்ரெட் கோட் இல்லாமல் யூஸர்களால் லாக் செய்யப்பட்ட சாட்டை ஆக்சஸ் செய்யவும் முடியாது. சரியான சீக்ரெட் கோட் போட்டால் மட்டுமே திறக்க முடியும். இல்லையென்றால் சாட்டை திறக்க முடியாது. இப்போது எவ்வாறு வாட்ஸ்அப் சீக்ரெட் கோட் வசதியை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

விளம்பரம்

முதலில் யாருடைய சாட்டை சீக்ரெட் கோட் பயன்படுத்தி நீங்கள் லாக் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த சாட்டை லாங் பிரஸ் செய்து, பிறகு திரையின் வலது மேல் புறம் தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து லாக் சாட் என்பதை கிளிக் செய்யவும்.இப்போது திரையில் தோன்றும் continue என்ற பட்டனை பிரஸ் செய்யவும். அதில் உங்களது கைரேகை அல்லது ஃபேஸ் அன்லாக் வசதியை பயன்படுத்தி சட்டை லாக் செய்து கொள்ளலாம். இப்போது உங்களது சாட் லாக் செய்யப்பட்டு இருக்கும். இவ்வாறு லாக் செய்யப்பட்ட சாட்களை மேலே ஸ்வைப் செய்து அதில் லாக்ட் சாட்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஓபன் செய்து கொள்ளலாம்.

விளம்பரம்
ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!


ரசாயன உரத்தேவையை குறைப்பது எப்படி.? சூப்பர் டிப்ஸ் இதோ.!

சீக்ரெட் கோடை எவ்வாறு செட்அப் செய்வது?

  • உங்களது வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து லாக்ட் சாட்ஸ் ஃபோல்டரை ஆக்சஸ் செய்யவும்.

  • திரையின் வலது மேல்புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து சாட் லாக் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  • செலக்ட் கோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  • உங்களது விருப்பத்தின்படி சீக்ரெட் கோட் பதிவிடவும்.

  • மீண்டும் ஒருமுறை உங்களது சீக்ரெட் கோடை பதிவிடவும்.

அவ்வளவுதான் உங்களது சாட் லாக் செய்யப்பட்டு விட்டது. இனி சீக்ரெட் கோடை பயன்படுத்தி மட்டுமே உங்களது சாட்டை ஓபன் செய்ய முடியும்.

.



Source link