இபளோகம பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த காட்டு யானை மகா இலுப்பள்ளம் தபால் அலுவலகம் பொறியியல் அலுவலகம் மற்றும் தோட்டங்களிலும் சுற்றித் திரிவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளால் பயிர்கள் மற்றும் சொத்துக்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இப்பகுதியில் யானைகளின் தாக்குதல்களினால் சில மனித உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்
The post மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் appeared first on Thinakaran.