Google Chrome பயனர்களுக்கு அரசு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்து உள்ளது. அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் குரோம் நாள்தோறும் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த மாதம் இந்திய அரசாங்கத்தால் ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், குரோம் பிரௌசரின் பல வேர்ஷன்களில் உள்ள குறைபாடுகளை அரசு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதை தவிர்க்க சில பாதுகாப்பு குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கணினியில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் தனிப்பட்ட டேட்டாக்களை திருட முடியும் என்று இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.
CERT-In கூற்றுப்படி, இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியில் நுழைந்து உங்கள் முக்கியமான தகவல்களை திருடலாம். குறிப்பாக Windows மற்றும் Mac யூசர்கள் இந்த அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்படலாம். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாதுகாப்புக் குறிப்பில், கூகுள் குரோமின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்ஷன்களில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது Windows, Mac மற்றும் Linux சிஸ்டங்களை பாதிக்கலாம். கூகுள் குரோமின் “Serial” மற்றும் “Family Experiences” ஆகியவற்றில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியில் arbitrary code-ஐ இயக்கலாம் மற்றும் டேனியல் ஆஃப் சர்வீஸ் (DoS) தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.
Also Read:
ராக்கெட்டை பார்ட் பார்ட்டா பாக்கலாம்… உங்க பிரெண்ட்ஸ் கூட ஸ்பேஸ் சுத்தி பாக்கலாம்…
எந்த யூசர்கள் பாதிக்கப்படுகிறார்கள்?:
குரோமின் முந்தைய வெர்ஷன்களுக்கான பாதுகாப்பு ஆபத்து குறித்து வெளியிடப்பட்டுள்ளது. லினக்ஸ்-க்கான 130.0.6723.116-க்கு முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன்கள் பாதிக்கப்படலாம். Windows மற்றும் Mac ஆகியவைக்கான 130.0.6723.116/.117-க்கு முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யூசர்கள் என்ன செய்ய வேண்டும்?:
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, யூசர்கள் சில முக்கியமான விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். Windows மற்றும் Mac-ல் அப்டேட்களை சரிபார்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்ற வேண்டும். அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
-
உங்கள் டெஸ்க்டாப்பில் குரோம்-ஐ ஓபன் செய்யவும்.
-
மேலே, வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
-
கீழே, ஹெல்ப் என்பதை கிளிக் செய்து, About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.
-
அப்டேட்களை சரிபார்த்து, கிடைக்கக்கூடிய புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.
-
பிறகு கூகுள் குரோமை க்ளோஸ் செய்து, மீண்டும் திறக்கவும்.
Windows மற்றும் Mac யூசர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பான குரோம் வெர்ஷன்கள்:
Windows மற்றும் Mac ஆகியவைக்கான குரோம் வெர்ஷன் 130.0.6723.116/117 ஆகும். லினக்ஸுக்கான குரோம் வெர்ஷன் 130.0.6723.116 ஆகும். ஆகவே பயனர்கள் இதனை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய கூகுள் குரோம் அப்டேட் மூலம் இந்த ஆபத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
.