கடந்த அரசாங்கத்தின்போது, தலாவ பிரதேச சபை மூலம் 2017 ஆம் ஆண்டு 97 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தலாவ வாராந்த சந்தை கட்டிடம் திறக்கப்படாமல் களைகள் வளர்ந்து வருவதாக பிரதேசவாசிகள் மற்றும் வியாபாரிகளும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அவர் அங்கு களவிஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டார்.

இதன்போது வியாபாரிகள் தெரிவிக்கையில், தற்போது காணப்படும் சிறிய குறைபாடுகளை திருத்தம் செய்து இந்த சந்தை தொகுதியை திறந்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அதன்போது, மிக விரைவில் குறித்த குறைபாடுகளை திருத்தம் செய்து சந்தை கட்டிட தொகுதியினை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தவிர தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலைய வியாபார நடவடிக்கைகளுக்கு மரக்கறி வகைகளை கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தரிப்பிடம் ஒன்று இல்லாமை பெரும் குறையாக இருப்பதாக தெரிவித்தனர். இதன் போது, வேறொரு இடத்தை கண்காணிப்பு செய்த ஆளுநர், வியாபாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்னாலுள்ள பழைய சந்தை தொகுதியை புதிய மத்திய நிலையத்துடன் இணைத்து வெற்றிடமாகவுள்ள அந்த இடத்தை காபட் இட்டு வாகன தரிப்பிடத்தினை உருவாக்குவதற்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

The post தலாவ வாராந்த சந்தைக் கட்டடத்தை பார்வையிட ஆளுநர் நேரடி விஜயம் appeared first on Thinakaran.



Source link