அமெரிக்காவின் பென்சில்வேனியா மகாணத்தைச் சேர்ந்தவர் 49 வயதான பெஞ்சமின் கார்சியா. இவர், 50 வயதான தனது காதலி கார்மென் மார்டினெஸ் சில்வா உடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கார்மென் மார்டினஸ், தனக்கு பிடித்தது போன்று புதிதாக சிகை அலங்காரம் செய்துள்ளார். ஆனால், அவரின் புதிய ஹேர் ஸ்டைல் காதலன் பெஞ்சமினை ஈர்ப்பதற்குப் பதில் வெறுப்பேற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கோபம் கொண்ட கார்மென், அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனது தாயாரை கொலை செய்து விடுவேன் என்று, பெஞ்சமின் மிரட்டியதாக அவரின் மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். இருந்த போதும் காதலனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய கார்மென், அவரது சகோதரர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். மேலும், இனி தன்னை பெஞ்சமின் தேடி வர வேண்டாம் என்று பிரெஃண்ட் ஒருவர் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு கோபமடைந்த காதலன் பெஞ்சமின், கார்மெனின் சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தனது சகோதரி வரவில்லை என்று கார்மெனின் சகோதரர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பிய பெஞ்சமின், சிறுது நேரத்துக்குப் பின் மீண்டும் அங்கு சென்றுள்ளார்.
அப்போது, கதவை திறந்த கார்மெனின் சகோதரரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெஞ்சமின் குத்தியுள்ளார். அவறின் அலறல் சத்தம் கேட்டு, உள்ளே இருந்த கார்மென் பதறியடித்து ஓடி வந்துள்ளார். அங்கு காதலியை கண்டதும் ஆத்திரத்தில், அவரில் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் பெஞ்சமின் ஆக்ரோஷமாக குத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் :
“சக்கரம் இல்லாத வாகனம் மகாவிகாஸ் கூட்டணி” – பிரதமர் மோடி விமர்சனம்!
தடுக்க வந்த அவரின் சகோதரர் உட்பட இருவரையும் கத்தியில் குத்திக் கிழித்துள்ளார். இதனால், 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர். இதில், படுகாயமடைந்த கார்மென் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்தக் கறை படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர்.
ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை என்பதற்காக காதலியை, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.