சீரற்ற காலநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த  யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும், ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் குறித்த வீதி மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸ் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு appeared first on Thinakaran.



Source link