சதம் அடித்த பிறகு விராட் கோலி தனது மனைவிக்கு அன்பை பரிமாறும் ‘ஃப்ளையிங் கிஸ்’ ஸ்டைலுக்கு பின்னால் உள்ள கதையை ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்தது. இதில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை ஈஸியாக தோற்கடித்தது. இந்த வெற்றியில் பல சுவாரஸ்யங்கள் அடங்கியிருந்தாலும், இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியின் சதம் அதில் உச்சமாக இருந்தது. ஏனென்றால், விராட் கோலி சர்வதேச அரங்கில் விளாசிய 81வது சதம் இது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் அடிக்கும் 30வது சதமும்கூட.

விளம்பரம்

கிட்டத்தட்ட பல நாட்களுக்கு பிறகு அடித்த இந்த சதத்தை தனது மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து களத்தில் கொண்டாடினார் விராட் கோலி. இப்போது மட்டுமல்ல, எப்போது சதம் அடித்தாலும் பேட் மூலமாக தனது மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது விராட் கோலியின் வழக்கம். இது அவரது ஐகானிக் ஸ்டைலாக மாறிப்போனது.

இந்த நிகழ்வுக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி விளக்கியுள்ளார். பெர்த் போட்டியின் வர்ணனையின்போது பேசிய ரவி சாஸ்திரி, “இந்திய அணியின் பயிற்சியாளராக நான் இருந்தபோது அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோலியும் காதலித்து கொண்டிருந்தனர். இருவரும் அப்போது திருமணம் செய்துகொள்ளவில்லை.

விளம்பரம்

ஒருநாள் என்னிடம் வந்த விராட் கோலி ‘வீரர்களுடன் பயணிக்க அவர்களின் மனைவிக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. நான் எனது காதலியை என்னுடன் அழைத்து வரலாமா’ என்று கேட்டார். அதற்கு, ‘நிச்சயம் அழைத்து வாருங்கள்’ என கோலிக்கு பதில் கூறினேன்.

Also Read | அன்று ஒன்றிணைய அழைப்பு.. இன்று பிறந்தநாள் வாழ்த்து.. பேசுபொருளான அஜித் – உதயநிதி நெருக்கம்!

ஆனால் கோலியோ, ‘பிசிசிஐக்கு அனுமதிக்க வேண்டுமே?’ எனக் கேட்டார். அதன்பின் நான் பிசிசிஐ நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு விராட் கோலி தன்னுடன் அனுஷ்கா ஷர்மாவை அழைத்துவர அனுமதி வாங்கி கொடுத்தேன்.

விளம்பரம்

அப்படி, அனுஷ்கா ஷர்மா பார்க்க வந்த முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2014ல் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 160 ரன்களை விளாசினார். அந்த சதத்தின்போது தான் விராட் கோலி முதன்முதலாக அனுஷ்கா ஷர்மாவுக்கு இதே ஸ்டைலில் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார். ஏனென்றால், விராட் கோலிக்கு அனுஷ்கா ஷர்மா அவ்வளவு ஆதரவாக உள்ளார். அந்த அன்பை தான் விராட் இப்படி வெளிப்படுத்துகிறார்” என்று பிளாஷ்பேக் சம்பவத்தை நினைவு கூர்ந்தார் ரவி சாஸ்திரி.

விளம்பரம்
விளம்பரம்

ரவி சாஸ்திரி கூறிய இந்த சம்பவத்துக்கு பின்னர்தான் பிசிசிஐ தனது விதியை தளர்த்தியது. அதன்படி, வீரர்களுடன் மனைவிகள் மட்டுமில்லாமல், காதலர்களும் செல்ல வழி உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

.





Source link