இந்தியாவில் புனித பொருட்களாக கருதப்படும் பல்வேறு பொருட்களில் மலரும் ஒன்று. இந்தியாவில் ஒரு மனிதனின் இனிய தொடக்கம் முதல் இறுதி நிகழ்வு வரை மலர் இன்றி அமையாது. மேலும் சுப நிகழ்ச்சிகளிலும் உணவு,உடைக்கு அடுத்து முக்கிய தேவையாக மலர் கருதப்படுகிறது.

கோவில் திருவிழாக்கள், விசேஷங்கள் மற்றும் சுப நிகழ்ச்சி வீடுகளிலும் அலங்காரப் பொருட்களாக மலர் கருதப்படுகிறது மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து அதனை தோரணமாக கட்டி தொங்கவிட்டு அனைத்து சுப நிகழ்வுகளையும் அலங்கரிப்பார்.

விளம்பரம்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மலர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் விளைவிக்கப்படுகிறது. இந்த மலர்கள் அனைத்தும் மனிதர்களால் பறிக்கப்பட்டு பல்வேறு மலைச்சந்தைக்கு வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அலையாத்தி காடுகளில் அமர ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த பறவைகள்… பீச் ரோட்டில் பிளம்மிங்கோவைக் காண மக்கள் ஆர்வம்…

இந்திய அளவில் பல்வேறு மலர் சந்தைகள் இருந்தாலும் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றதாக விளங்கும் தோவாளை மலர் சந்தை தலைமுறைகளை தாண்டிய வியாபாரத்திற்காகவே புகழ்பெற்றதாக விளங்குகிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மலைச்சந்தையான தோவாளை பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மலர் வணிக சந்தை சிறப்பு குறித்து வியாபாரி கிருஷ்ணன் கூறுகையில்…..

விளம்பரம்

நான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரம் செய்து வருகிறேன் மேலும் எனக்கு வள்ளியூர் மற்றும் திருச்செந்தூர் அருகே உள்ள திசையன்விளை பகுதிகளிலும் பூக்கடைகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலை சந்தை சுமார் 300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க மலர் சந்தையாக விளங்குகிறது.

இதையும் படிங்க: Ooty Botanical Garden: ஊட்டி கார்டனில் உருவான கடிகார அமைப்பு… செடிகளைக் கொண்டே செய்த செம்ம முயற்சி…

முன்னோர்கள் இந்த மலர் சந்தையை நடத்த பின்னோர்கள் அதை அப்படியே எடுத்து செல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து பெங்களூரு, சேலம், நிலக்கோட்டை,ஊட்டி, ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தோவாளை மலர் சந்தைக்கு பூக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

விளம்பரம்

மேலும் இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்கள் திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தோழி மலர் சந்தையில் பூக்களின் தேவையை பொருத்து பூக்கள் இங்கு வர வைக்கப்பட்டு அவை விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

தோவாளை மலர் சந்தையில் 120 வகைக்கும் மேற்பட்ட பூக்கள் தேவைக்கேற்ப விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல புது வகையான பூக்கள் கண்டுபிடிக்கப்படுகிறது இந்த பொது வகையான பூக்கள் அனைத்தும் தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு பல வாடிக்கையாளர்களால் விற்பனைக்கு வாங்கி செல்லப்படுகிறது எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.



Source link