இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 36 வது பிறந்த நாளை நவம்பர் 5ஆம் தேதி கொண்டாடினார். பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், சூரிய ஒளியில் அவரின் படத்தினை வரைந்து வித்தியாசமான முறையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக், ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். இவர் சமீபத்திய காலமாகவே மரப் பலகையில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியம் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

விளம்பரம்

சூரிய ஒளியை லென்ஸ் உதவி கொண்டு மரப் பலகையில் குவித்து அதன் மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்து வரையப்படும் இந்த ஓவியம் சன்லைட் ஆர்ட் எனப்படுகிறது. விராட் கோலியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடைய படத்தைச் சூரிய ஒளியில் வரைந்து, அதை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: 6 நாள் கந்த சஷ்டி விரதம் இருக்க முடியலையா… அப்போ கந்தன் கருணையைப் பெற இதை பண்ணுங்க…

கார்த்திக் பதிவு செய்த விராட் கோலியின் சன் லைட் ஆர்ட்டால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் பலரும் கார்த்திக்கின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

  • First Published :



Source link