ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பிறகு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஒரு பகுதியாக, முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இந்த மோசமான தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாடம் கற்றுக் கொண்டு, தவறுகளை சரி செய்திருக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சொந்த மண்ணில் கடும் தோல்வியை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கடும் சவாலை சந்திக்க உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா ஆதிக்கம் செலுத்தி நான்கு தொடர்களை வென்றுள்ளது. அவற்றில் 2 போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்துள்ளது.

விளம்பரம்

அதே நேரம், உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய நேரடியாக தகுதி பெற இந்த 5 டெஸ்டில் 4 போட்டிகளை வெல்ல வேண்டும். 1 போட்டியை டிரா செய்ய வேண்டும். இதில் மாற்றம் ஏதும் ஏற்பட்டால் மற்ற அணிகளின் முடிவுக்கு இந்திய அணி காத்திருக்க வேண்டும். இதனால் இந்த ஆஸ்திரேலிய தொடர் இந்திய வீரர்களுக்கு குறிப்பாக தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அபிமன்யு ஈஸ்வரன் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இன்னிங்ஸைத் தொடங்கலாம். சுப்மான் கில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க – 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள்?… சர்வதேச கமிட்டிக்கு பறந்த கடிதம்!

முதல் டெஸ்ட்டில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர்க்ள- யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ஆகாஷ் தீப்.

விளம்பரம்

.



Source link