மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயதை 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மெசேஜ் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா அல்லது போலி செய்தியா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு கால வயதை 60 இலிருந்து 62 ஆக மத்திய அரசு அதிகரிக்க முடிவு செய்து இருப்பதாக சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிடப்பட்டுள்ள அந்த வைரல் மெசேஜில் மத்திய அரசு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்பிளாயிகளுக்கான ஓய்வு கால வயதை ஏப்ரல் 1, 2025 முதல் 62 ஆக அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளதாக கூறுகிறது.
மேலும் அந்த போலியான வைரல் மெசேஜில் இதற்கான இரண்டு காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் பென்ஷன் மீது சார்ந்து இருப்பதற்கான தேவையை குறைக்கவும், அனுபவம் பெற்ற நபர்களின் தேவை அதிகமாக இருப்பதுமே இந்த ஓய்வு கால வயது அதிகரிப்பு முடிவுக்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
இது ஒரு போலி செய்தி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பிரஸ் இன்பர்மேஷன் பியூரியா (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு, அரசு இந்த மாதிரியான எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இது மாதிரியான போலி செய்திகளில் மக்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்கான ஆலோசனையையும் பிரஸ் இன்பர்மேஷன் பியூரியா ஃபேக்ட் செக் வழங்கி உள்ளது.
PIB மூலம் உண்மை சரிபார்ப்பு சோதனை செய்வது எப்படி?
இது மாதிரியான சந்தேகத்திற்குரிய மெசேஜை நீங்கள் பெறும் பொழுது அதன் உண்மை தன்மையை நீங்கள் நிச்சயமாக சோதித்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கிடைத்துள்ள மெசேஜ் உண்மையா அல்லது போலியா என்பதை சரி பார்ப்பதற்கு நீங்கள் https://factcheck.pib.gov.in என்பதற்கு அந்த மெசேஜை அனுப்ப வேண்டும்.
மாறாக உண்மையை தெரிந்து கொள்வதற்கு +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் கூட அனுப்பலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் நீங்கள் உங்களுக்கு கிடைத்த மெசேஜை அனுப்பலாம்.
எனவே உங்களுக்கு எந்த மாதிரியான ஒரு மெசேஜ் வந்தாலும் உடனடியாக அதனை நம்பி விடாமல் அதன் உண்மை தன்மையை சோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியம். தற்போது அதிக அளவில் போலி மெசேஜ்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் வாயிலாக புரிந்து கொள்ளலாம்.
.