சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விரிதிமான் சாஹா அறிவித்துள்ளார்.
40 வயதாகும் சாஹா, இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். நட்சத்திர வீரர் தோனி ஓய்வுக்குப்பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட்டவர் சாஹா. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆயிரத்து 353 ரன்களை எடுத்த சாஹா 3 சதங்களையும் விளாசியுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சாஹா தனது ஓய்வை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் சாஹா பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்தூரி கொடுத்த புதிய விளக்கம் இதுதான்!
ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதல் இதுவரை, கொல்கத்தா, சென்னை, பஞ்சாப், ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் என 5 அணிகளில் விளையாடியுள்ளார் சாஹா.
.
- First Published :