ஆர்ஆர் கேபல் லிமிடெட்டின் (RR Kabel Ltd) நிர்வாக இயக்குநரான ஸ்ரீகோபால் காப்ரா, சமீபத்தில் மும்பையின் ஆடம்பர சொகுசு ரியல் எஸ்டேட் சந்தையில் புகழ்பெற்றதாக உள்ள ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டில் (Oberoi Three Sixty West) கடலை பார்த்தபடி இருக்கும் இரண்டு பரந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ரூ.198 கோடி மதிப்பிலான இந்த பரிவர்த்தனை, வோர்லி போன்ற முக்கிய இடங்களில் உள்ள பிரீமியம் சொத்துக்களில் பணக்கார தனி நபர்கள் முதலீடு செய்யும் போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

விளம்பரம்

அக்டோபர் 2024-ம் ஆண்டின் பிற்பகுதியில், காப்ரா குடும்பம் ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டின் 62-வது மாடியில் அமைந்துள்ள மொத்தம் 13,809 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு அடுத்தடுத்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது. இதில் 7,167 சதுர அடி கொண்ட பெரிய கட்டடம், ஸ்ரீகோபால் கப்ராவின் மகன் ராஜேஷ் கப்ரா மற்றும் அவரது மனைவி மோனல் கப்ரா ஆகியோரால் ரூ.102.76 கோடிக்கு வாங்கப்பட்டது.

6,642 சதுர அடியில் உள்ள இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பை, ஸ்ரீகோபால் மற்றும் அவரது மனைவி கிருதிதேவி கப்ரா ரூ.95.40 கோடிக்கு வாங்கியுள்ளனர். இரண்டு குடியிருப்புகளும் அரேபிய கடலைப் பார்த்தபடி கண்ணைக் கவரும் காட்சிகளை வழங்குகின்றன. இங்கு பிரத்யேகமான பத்து பார்க்கிங் இட வசதிகளும் உள்ளன.

விளம்பரம்

இப்படி ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டில் வீடுகளை வாங்குவது காப்ரா குடும்பத்தின் முதல் முயற்சி அல்ல; இதற்கு முன்பு நவம்பர் 2019ல் 42வது மாடியில் ரூ.56 கோடிக்கு இரண்டடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினார்கள். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்களது தொடர்ச்சியான முதலீடு மும்பையின் உயரடுக்கினரிடையே இதன் ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் என்பது ஓபராய் ரியாலிட்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சொகுசு குடியிருப்பு வளாகமாகும். இதில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் உள்ளன. இங்கு மக்கள் தங்குவதற்கு வசதியான சொகுசு குடியிருப்புகள் மற்றும் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் உள்ளது. மும்பையின் மிகவும் விரும்பப்படும் சுற்றுப்புறங்களில் ஒன்றான வோர்லியில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, அதிநவீன வசதிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் பரந்த காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்ட உயர் வசதி கொண்ட ஆடம்பரமான வாழ்க்கையை வழங்குகிறது.

விளம்பரம்

இந்த வளாகம் மும்பையின் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில் ஆடம்பரம் மற்றும் தனித்துவத்தின் அடையாளமாக மாறியுள்ளதோடு, பல நட்சத்திர அந்தஸ்துள்ள நபர்களையும் ஈர்த்து வருகிறது. அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் ஒருவர். இதே டவரில் சுமார் ரூ.60 கோடிக்கு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை இவர் வாங்கியுள்ளார். ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் உடனான அவரது தொடர்பு இக்கட்டடத்தின் கவர்ச்சியை மக்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிக்க:
பென்ஷனை தடையின்றி பெற ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைன் & ஆஃப்லைனில் சமர்ப்பிப்பது எப்படி…??

விளம்பரம்

காப்ரா குடும்பத்தின் சமீபத்திய பர்ச்சேஸ், இந்திய கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலங்கள் ஆடம்பர ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் முதலீடு செய்யும் போக்கை பிரதிபலிப்பதாக உள்ளது. ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் சமீபத்தில் குறிப்பிடத்தக்க பரிவர்த்தனைகளைக் கண்டது; உதாரணமாக, அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் ராதாகிஷன் தமானி இங்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.1,200 கோடிக்கு வாங்கியுள்ளார்.

.



Source link