இலங்கை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, பலம் வாய்ந்த இந்திய அணியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தான் , போட்டித் தொடருக்குமுன் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனாலும் யாருமே எதிர்பார்க்காத வகையில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதன் இன்னிங்ஸில் 46 ரன்களில் சுருண்டு அதிர்ச்சி அளித்தது.

விளம்பரம்

முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டபோதிலும், ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் ரோகித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்ததும் பின்னடைவாக அமைந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, பெங்களூருவில் ஏற்பட்ட சறுக்கல், புனே, மும்பை டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ரன் மிஷின் விராட் கோலி, ஹிட் மேன் ரோகித் ஷர்மா போன்ற அனுபவ வீரர்கள், ரன் குவிக்க முடியாமல் திணறியது இந்திய அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.

விளம்பரம்

3 டெஸ்ட் போட்டிகளில் கோலி 93 ரன்களும், ரோகித் 91 ரன்களும் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். நியூசிலாந்து உடனான தொடரில் மட்டுமன்றி, நடப்பு ஆண்டில் நடந்த எந்த டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அப்படி இருக்கையில், இழந்த ஃபார்மை மீட்க, ரஞ்சி தொடரில் விளையாடி இருக்கலாம் என்பதும் கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Also Read :
3 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி… WTC பாயின்ட்ஸ் டேபிளில் பின் தங்கியது இந்திய அணி

விளம்பரம்

பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மட்டுமே ஓரளவுக்கு ரன் சேர்த்தார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில், நியூசிலாந்து அணி சரியான வியூகங்களை வகுத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. மிட்செல் சாண்ட்னர், அஜாஸ் படேலில் சுழலை சமாளிக்க முடியாமல் இந்திய அணியினர் தடுமாற்றம் அடைந்தனர்.

புனே டெஸ்ட்டில் மிச்செல் சாண்ட்னர் 13 விக்கெட்களையும், மும்பை டெஸ்ட்டில் அஜாஸ் 11 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். மும்பை டெஸ்ட் நியூசிலாந்தின் வில் யங் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

விளம்பரம்

ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோரின் கணகச்சிதமான பேட்டிங்கும், பெங்களூரு டெஸ்ட்டில் நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவியது. ரவீந்திர ஜடேஜா, கடைசி இரண்டு டெஸ்ட்களில் விளையாடி வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழலில் அசத்தினாலும், இந்திய அணியின் மோசமான பேட்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்திடம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆனதால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கில் வெற்றி பெற வேண்டிய என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி, புத்துணர்வு பெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், புஸ்வாணமானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விளம்பரம்

.



Source link