அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று வெளியாகும் என இணையத்தில் தகவல் பரவியுள்ளது. இதனை பட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவிக்காவிட்டாலும் நம்ப தகுந்த வட்டாரங்கள் விடாமுயற்சி டீசர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. இதனால் நள்ளிரவு கொண்டாட்டத்திற்கு அஜித் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

விளம்பரம்

நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்துடைய போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் காரணமாக வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே அஜித் நடிப்பில் உருவான மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புஷ்பா 2 படத்தை தயாரித்து இருக்கிறது விடாமுயற்சி படத்திலிருந்து. போஸ்டர்களை தவிர்த்து எந்த ஒரு அப்டேட்டும் குறிப்பிடும்படி வெளியாகவில்லை. படத்துடைய ஷூட்டிங் காட்சிகள் சில வெளிவந்தாலும் அவை அதிக வரவேற்பை பெறவில்லை.

விளம்பரம்

இந்நிலையில் விடாமுயற்சி படத்துடைய டீசர் இன்று இரவு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி உள்ளது. இரவு 11:08க்கு விடாமுயற்சி டீசர் வெளியாக கூடும் என தகவல் வெளிவந்துள்ளன.நம்ப தகுந்த வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

.



Source link