ரிலீஸ் அறிவிப்புடன் அஜித் நடித்துள்ள விடா முயற்சி படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 1 நிமிடம் 49 நொடிகள் கொண்ட படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.
நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்துடைய போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் காரணமாக வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள விடா முயற்சி படத்தின் டீசர் இணையத்தில் அதிக பார்வைகளை குவித்து ட்ரெண்டாகியுள்ளது.
விடாமுயற்சி டீசரை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
டீசர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக அஜித்தின் ரசிகர்கள் கொண்டி வருகின்றனர். டீசரில் குறிப்பிடும் விதமாக விடா முயற்சி திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி பொங்கலுக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடா முயற்சி ரிலீஸை டீசரில் உறுதி செய்துள்ளார்கள்.
இதையும் படிங்க – போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..? தேசிய விருது பெற்ற நடிகை தான்!
இதனால் குட் பேட் அக்லி படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.