இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று விட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில், 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

விளம்பரம்

அந்த அணி இரண்டாம் நாள் முடிவில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மதிய உணவு இடைவேளை வரை 20 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. 29.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை  3-0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி.

விளம்பரம்

3 மற்றும் அதற்கு அதிகமான போட்டிகளில் இந்திய அணி இதுவரை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆனது கிடையாது. அந்த மோசமான ரிக்கார்டை நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.

இதையும் படிங்க – 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி… WTC பாயின்ட்ஸ் டேபிளில் பின் தங்கியது இந்திய அணி

இந்த முழுமையான வெற்றியின் மூலம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த அணி என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளது நியூசிலாந்து. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இதுவரை 4 அணிகள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், 5-ஆவதாக நியூசிலாந்தும் நுழைந்துள்ளது.

விளம்பரம்

.



Source link