ஜூலை மாதம் இந்தியாவில் பிரீமியம் டேப்லெட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Pad 2 இப்போது அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் டேப்லெட்டானது 8 ஜிபி+128 ஜிபி மற்றும் 12 ஜிபி+ 256 ஜிபி என்ற இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 8 ஜிபி+128 ஜிபி டேப்லெட் ரூ.39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம் 12 ஜிபி+256 ஜிபி டேப்லெட் மாடலின் விலை ரூ.42,999 ஆகும்.
ஒன்பிளஸ் இப்போது டேப்லெட்டை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது. அதன்படி 8 ஜிபி +128 ஜிபி டேப்லெட் ரூ.37,999 மற்றும் 12 ஜிபி+256 ஜிபி டேப்லெட் ரூ.40,999 என விலையை குறைத்துள்ளனர். இது அறிமுகம் செய்யப்பட்ட விலையில் நேரடியாக ரூ.2,000 தள்ளுபடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தள்ளுபடி அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளத்தில் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ICICI, Kotak மற்றும் RBL கார்டு வைத்திருப்பவர்களுக்கு உடனடி சலுகையாக ரூ.3,000 வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது 8 ஜிபி+128 ஜிபி மாடலுக்கு ரூ.34,999ஆகவும், 12 ஜிபி+256 ஜிபி வேரியண்டிற்கு ரூ.37,999ஆகவும் குறைக்கிறது. எனவே கார்டுதாரர்கள் இந்த ஆஃபரை பயன்படுத்தி பயன்பெறுமாறு கூறப்பட்டுள்ளது.
OnePlus Pad 2 சிறப்பம்சங்கள்
OnePlus Pad 2 பிரீமியம் டேப்லெட் 12.1-இன்ச் 3K IPS LCD பேனல் மற்றும் Dolby Vision சப்போர்ட் கொண்ட, 3000×2120 ரெசொலூஷன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. டிஸ்ப்ளே உயர் 303 PPI தெளிவுத்திறன் மற்றும் 144Hz, 120Hz, 90Hz, 60Hz, 50Hz, 48Hz மற்றும் 30Hz இடையே சரிசெய்யக்கூடிய பல்துறை புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது.
இதையும் படிக்க:
யூடியூப் கிரியேட்டர்களுக்கு செம ஜாக்பாட் அறிவிப்பு… இந்தியாவுக்கு வந்தாச்சு ‘ஷாப்பிங் திட்டம்’
600 நிட்களின் உச்ச பிரகாசத்துடன், ஸ்க்ரீன் பல்வேறு ஒளி நிலைமைகளுக்கு (various lighting ) மிகவும் பொருத்தமானது. இது Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது கேமிங்கிற்கும், வழக்கமான பயன்பாட்டிற்கும் சிறந்த செயல்திறனை வழங்கும். எனவே அதிக பயன்பாடு இருப்பவர்கள் கூட இதனை யோசிக்காமல் வாங்கலாம்.
நீண்ட நேர சார்ஜ் வழங்கும் நோக்கத்துடன் டேப்லெட்டில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9150mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8MP ஸ்னாப்பர் உள்ளது, வீடியோ எடுக்க பின்புறத்தில் 13MP ஷூட்டர் உள்ளது.
இதையும் படிக்க:
ஒன்பிளஸ் 13 vs ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்கள்.. இரண்டுக்கும் உள்ள 5 வேறுபாடுகள் என்னென்ன?
டேப்லெட்டில் திறந்த கேன்வாஸ் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டிற்கான AI டூல்பாக்ஸ் உள்ளது. இது OxygenOS 14.1இல் இயங்குகிறது. மேலும் டேப்லெட் வைஃபை, புளூடூத் மற்றும் டைப்-சி போர்ட்களை ஆதரிக்கிறது, தடையற்ற இணைப்புக்கான டைப்-சி ஆடியோ சாதன போர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதனால் இந்த தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி விரைவாக வாங்கிக் கொள்ளுங்கள்.
.