அஜித் நடித்துள்ள விடா முயற்சி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்துடைய போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் காரணமாக வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

விளம்பரம்

இதற்கிடையே அஜித் நடிப்பில் உருவான மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க – பள்ளி நண்பரை கரம்பிடிக்கப் போகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – திருமணம் எங்கே..? தேதி என்ன..?

இந்த நிறுவனம்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புஷ்பா 2 படத்தை தயாரித்து இருக்கிறது விடாமுயற்சி படத்திலிருந்து. போஸ்டர்களை தவிர்த்து எந்த ஒரு அப்டேட்டும் குறிப்பிடும்படி வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று விடா முயற்சி படத்தின் டீசர் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

விளம்பரம்

இந்நிலையில் இரவு 11.08 மணியளவில் விடா முயற்சி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விடாமுயற்சி டீசரைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

விளம்பரம்

டீசர் மிகவும் விறுவிறுப்பாக உள்ளதென ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது விடா முயற்சி படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

.





Source link