தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர்
நாக சைதன்யா, இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இவரும் பிரபல நடிகை சமந்தாவும் காதலித்து 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர்.

Also Read:
நாக சைதன்யா – சோபிதா திருமணம் குறித்து ஜோதிடர் சர்ச்சை கணிப்பு… வலுக்கும் எதிர்ப்பு!

விளம்பரம்

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 2021ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்திற்கு பிறகு இருவரும் தங்களது வழியில் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

அமேசான் பிரைம் ‘Made in Heaven’ வெப் தொடர் மூலம் பிரபலமானவர் சோபிதா, அதை தொடர்ந்து பல வெப் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.

Also Read:
சோபிதாவுடன் திருமணம்… சமந்தாவுடனான அந்த ஒரு போட்டோவையும் நீக்கிய நாக சைதன்யா..!!

விளம்பரம்

மேலும் நடிகை சோபிதா தமிழில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்தார்.

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா இல்லத்தில் எளிமையாக நேற்று முடிந்தது.

அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு சோபிதாவை மருமகளாக தங்களது குடும்பத்தில் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி என்று நாகார்ஜுனா சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

News18

Also Read:
நாக சைதன்யா வீட்டில் களைகட்டும் விசேஷம்.. கர்ப்பமான சமந்தா..!! ஷாக் ஆகாதீங்க… உண்மை இதுதான்!

விளம்பரம்

ரசிகர்கள் பலரும் இருவரின் திருமணம் எப்போது என்று ஆவலாக காத்திருந்த நிலையில், நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நாக சைதன்யா லக்ஷ்மி சோபிதா இருவரின் திருமணத்திற்கு அன்போடு அழைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இருவரின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்கவுள்ளது.

Also Read: 
8 மணி நேரம் நடக்கப் போகும் நாக சைதன்யா – சோபிதா திருமணம்… வைரலாகும் இன்விடேஷன் ஃபோட்டோ…

நாகர்ஜுனாவிற்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகர்ஜுனா அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், அவரது முன்னாள் மனைவி லட்சுமி ஷரத் விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண அழைப்பிதழில் லட்சுமி – ஷரத், நாகர்ஜுனா -அமலா ஆகியோர் தங்களது மகன் திருமணத்திற்கு அழைப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

.



Source link