கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை குறைவாகவே காணப்பட்டு வந்த நிலையில், இன்று மற்றும் நாளை தொடர்ந்து சுப முகூர்த்தத் தினங்களாக இருப்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: புத்துணர்வு முகாம் செல்கிறதா திருச்செந்தூர் கோவில் யானை… வனத்துறை சொல்வதென்ன…
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.900க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1600க்கும், அரளிப்பூ கிலோ ரூ.240க்கும், வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.60க்கும், சம்பங்கி கிலோ ரூ.150க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.700க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.380க்கும், துளசி கிலோ ரூ.40க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.15க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.150க்கும், செவ்வந்தி கிலோ ரூ.350க்கும். விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உள்ளூர் பூக்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. குமரி மாவட்டத்திற்குக் கிழக்கு மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களின் அளவும் குறைவாக இருக்கிறது.
இதையும் படிங்க: கணவன் – மனைவி ஒன்னா முன்னேறுவதே அழகானது தான்… வாப்பிள்ஸ் விற்பனையில் அசத்தும் கப்பிள்ஸ்…
மேலும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை பண்டிகை, ஐயப்பன் கோவில் சீசன் மற்றும் ஏராளமான சுபமுகூர்த்தங்கள் இருப்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை காரணமாகப் பூக்களைப் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகப் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.