ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் சீனாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் இணைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13, அதன் முந்தைய மாடலான ஒன்பிளஸ் 12-ஐப் போலவே தோற்றமளித்தாலும், ஒன்பிளஸ் 12ல் இருந்து சில குறிப்பிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது ஒன்பிளஸ் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 வேறுபாடுகள் என்னென்ன? :

கர்வ்டு டிஸ்ப்ளே இனி இல்லை

2019 இல் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கர்வ்டு டிஸ்ப்ளே (curved display) ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப்களின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மேலும் சமீபத்திய ஒன்பிளஸ் 13 இந்த பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒன்பிளஸ் 13 இல் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra) அல்லது ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) போன்ற பிளாட் டிஸ்ப்ளே இல்லை என்றாலும், கர்வ்டு டிஸ்ப்ளே நான்கு பக்கங்களிலும் மிகவும் நுட்பமான வளைவுகளைக் கொண்டுள்ளது, இது இந்த ஸ்மார்ட்போனை கையில் வசதியாக வைத்திருப்பது போன்ற உணர்வை தரும்.

விளம்பரம்

ஒன்பிளஸ் 12 உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 13 இன் டிஸ்ப்ளே அளவு 6.82-இன்ச் 2K ரெசொலூசன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்ட் என கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே, ஒன்பிளஸ் 13 இல் ஸ்கிரீன் ப்ரொடெக்டரை இணைப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்கிறார்கள்.

புதிய பிசி கிளாஸ் சிப் (PC-class chip), சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்

ஒன்பிளஸ் 13 இல், அதன் முந்தைய மாடல்களை விட மிக முக்கியமான மேம்படுத்தல் அதன் சிப் ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட், தற்போது அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் திறமையான ஸ்மார்ட்போன் சிப் என்று கூறப்படுகிறது. இது சிபியு (CPU), ஜிபியு (GPU) மற்றும் ஏஐ (AI) செயல்திறன் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது மேம்பட்ட செயல்திறன், சிறந்த கேமிங் அனுபவம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மல்டிடாஸ்க்கிங் அனுபவத்தை தருகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. டிசம்பர் இறுதிக்குள் வருகிறது சூப்பர் அப்டேட்! – ரயில்வே முக்கிய அறிவிப்பு!

மேலும் இந்த புதிய சிப்பானது நீட்டிக்கப்பட்ட சாப்ட்வேர் சப்போர்ட் மற்றும் ஒன்பிளஸ் 13 ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 உடன் சீனாவில் மற்றும் உலகின் பிற பகுதிகளில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 உடன் வருகிறது.

மிகப்பெரிய பேட்டரி

ஒன்பிளஸ் 12-ன் பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை அதன் 5,400 mAh பேட்டரியுடன் மிகவும் சிறப்பாக இருந்தது, மேலும் ஒன்பிளஸ் 13 அதன் மிகப்பெரிய 6,000 mAh பேட்டரியுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

விளம்பரம்

இருப்பினும், வயர்டு சார்ஜிங்கில் இதன் வேகம் 100W ஆகவும், வயர்லெஸ் சார்ஜிங்கில் இதன் வேகம் 50W ஆகவும் உள்ளது. எனவே, ஒன்பிளஸ் 13 அதன் முந்தைய பதிப்புகளை விட முழுமையாக சார்ஜ் செய்ய இன்னும் சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில், அதன் முந்தைய மாடல்களைப் போலவே, ஒன்பிளஸ் 13 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பவர் ஷேரிங் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு செலவே இல்லாமல் கிடைக்கும் ரூ.7 லட்சம் காப்பீடு…எப்படி தெரியுமா?


ஊழியர்களுக்கு செலவே இல்லாமல் கிடைக்கும் ரூ.7 லட்சம் காப்பீடு…எப்படி தெரியுமா?

ஹாசல்பிளாட் கேமரா

ஒன்பிளஸ் 13 ஆனது இப்போது மூன்று 50 MP கேமராக்களுடன் பிரத்யேக டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. இந்த புதிய 50 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் சற்று அகலமான 120 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவைக் (120-degree field-of-view) கொண்டுள்ளது. அதே நேரத்தில் 50 MP டெலிஃபோட்டோ லென்ஸ் 3x ஆப்டிகல் ஜூம் வரம்பை 73மிமீ அளவில் கையாள்கிறது. அதேசமயம், ஒன்பிளஸ் 12 ஆனது 50 MP வைட் ஆங்கிள், 48 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸையும் 114 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவையும், அதே 3x டெலிஃபோட்டோ லென்ஸுடன் 64 MP டெலிஃபோட்டோ லென்ஸையும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட முதல் ஒன்பிளஸ் மாடல்

இந்த அம்சம் கவனிக்க எளிதாக இருந்தாலும், இது ஒரு பெரிய வித்தியாசத்தை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 12 இல் உள்ள ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் ஒப்பிடும்போது, ​​ஒன்பிளஸ் 13 ஆனது அதன் அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மூலம் ஸ்மார்ட்போனை விரைவாக அணுக முடியும். மேலும் இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் கைரேகையைப் சோதிக்கவும், அங்கீகரிக்கவும் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தப்படுவதால், ஏமாற்றுவது மிகவும் கடினம்.

.



Source link