அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து தடையின்றி பெறுவதை உறுதி செய்ய ஆண்டுதோறும் லைஃப் சர்டிஃபிகேட் எனப்படும் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
ஓய்வூதியம் பெறுபவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் மற்றும் அவரின் ஓய்வூதிய பணம் அவருக்கு தான் சென்று சேர்கிறது என்பதற்கு வாழ்க்கை சான்றிதழே உரிய சான்றாக செயல்படுகிறது. ஓய்வூதியம் பெறுவோர் இந்த வெரிஃபிகேஷனை நிறைவு செய்யாவிட்டால் மோசடிகளை தடுக்கவும், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சலுகைகள் சென்று சேர்வதை உறுதி செய்யவும் பென்ஷன் பேமென்ட்ஸ் நிறுத்தி வைக்கப்படலாம்.
முன்பு ஓய்வூதியம் பெறுவோர் இந்த சான்றிதழை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால் தற்போதோ ஜீவன் பிரமான் போன்ற டிஜிட்டல் சொல்யூஷன்கள் மூலம் லைஃப் சர்டிஃபிகேட்டை சப்மிட் செய்யும் ப்ராசஸ் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் வசதியாகவும் உள்ளது. ஜீவன் பிரமானானது, டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பயோமெட்ரிக் டெக்னாலஜியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான டிஜிட்டல் சர்வீஸ் ஆகும்.
இந்த சர்வீஸானது தங்கள் லைஃப் சர்ட்டிஃபிகேட்டை ஓய்வூதியம் பெறுவோர் ஆன்லைன் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் சமர்ப்பிக்க உதவுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் முதல், ஓய்வூதியம் பெறுவோர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் முக அங்கீகாரத்தை (face authentication) பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் சொல்யூஷனானது ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகள் அல்லது சர்வீஸ் சென்டர்களுக்கு நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கி உள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழ் கடைசி தேதி 2024:
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதை தொடர்ந்து ஓய்வூதியம் ஓய்வூதியதாரரின் அக்கவுண்ட்ஸ்களில் தொடர்ந்து வரவு வைக்கப்படுகிறது.
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சமர்ப்பிப்பது?
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க பல வசதியான ஆப்ஷன்களை கொண்டுள்ளனர். அந்த வகையில் மூன்று முறைகளின் அடிப்படையில் விரிவான வழிகாட்டி இங்கே;
1. நேரில் சமர்ப்பிக்கும் முறை:
ஓய்வூதியம் பெறுவோர் கீழ்காணும் இடங்களுக்கு செல்லலாம்…
-
ஓய்வூதியம் வழங்கும் வங்கி
-
தபால் அலுவலகம்
-
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பிற மையங்கள்
-
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்கள் மூலமும் பென்ஷனர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
-
மாவட்ட அளவிலான கருவூலங்கள் போன்ற சில ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களும் நேரடியாக ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்கின்றன. இந்த விருப்பம் உள்ளதா என சரிபார்க்க உங்கள் ஓய்வூதிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
மேற்கண்ட இடங்களில் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களை நேரடியாக சென்று சமர்ப்பிக்கலாம்.
2. டோர் ஸ்டெப் பேங்கிங் சர்வீஸ்:
நடமாட அல்லது உடல்நல பிரச்சனைகள் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு, பல பொதுத்துறை வங்கிகள் வீட்டு வாசலிலேயே வங்கி சேவைகளை வழங்குகின்றன. இது எப்படி வேலை செய்கிறது?
-
பேங்க் பிரதிநிதியின் வருகைக்கு ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டும்.
-
பேங்க் பிரதிநிதி நேரில் வந்து ஓய்வூதியதாரரின் பயோமெட்ரிக் தரவை சேகரித்து, குறிப்பிட்ட பென்ஷனர் சார்பாக வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிப்பார். இந்த விருப்பம் ஓய்வூதியம் பெறுவோர் வீட்டை விட்டு வெளியேறாமல் செயல்முறையை முடிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.
3. ஜீவன் பிரமான் (டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்):
இந்த டிஜிட்டல் சேவையானது பயோமெட்ரிக் வெரிஃபிகேஷனை பயன்படுத்தி செயல்முறையை எளிதாக்குகிறது. பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் ஆயுள் சான்றிதழை பெறலாம்.
-
ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் போர்ட்டலை விசிட் செய்யலாம் மற்றும் ஃபிங்கர்-பிரின்ட் ரீடரைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை உருவாக்கலாம் மற்றும் சமர்ப்பிக்கலாம்.
-
ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்து, ஆப்-இன் மூலம் தங்கள் வாழ்க்கை சான்றிதழை வழங்கலாம்.
-
தபால் அலுவலகம், வங்கிகள், கருவூலம் போன்ற ஓய்வூதியம் வழங்கும் முகவர் அலுவலகம் (PDA).
-
இது வீட்டிலிருந்து / மடிக்கணினி / மொபைலில் எந்த இடத்திலிருந்தும் உருவாக்கப்படலாம். டிஜிட்டல் லைஃப் சான்றிதழை உருவாக்க/பெற ஆதார் எண் அல்லது விஐடி அவசியம்.
இதையும் படிக்க:
SBI vs HDFC vs PNB vs ICICI வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்கள்!!!
-
ஓய்வூதியம் பெறுவோர் நாடு முழுவதும் உள்ள சில பொதுத்துறை வங்கிகளில் கிடைக்கும் ‘டோர் ஸ்டெப் பேங்கிங்’ வசதியையும் பெறலாம். இந்த சேவையானது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அல்லது அவர்களின் சான்றிதழை சமர்ப்பிப்பதில் அவர்களுக்கு உதவ, நடமாடும் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிடைக்கும்.
-
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ‘போஸ்ட்மேன் மூலம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான ‘Doorstep Service for Submission of Digital Life Certificate by Postman’மூலமாகவும் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “Postinfo APP”ஐ பதிவிறக்குவதன் மூலம் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
.