மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இந்திய அணியும் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. 65.4 ஓவர்கள் தாக்குபிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமா அந்த அணியின் டேரில் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை ஆரம்பித்தது.

விளம்பரம்

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக ரன்கள் சேர்த்த கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து மேட் ஹென்றி பந்துவீச்சில், லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்னில் ஆட்டமிழக்க, நைட் வாட்ச்மேனாக களம் வந்த முகமது சிராஜ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க – IPL 2025 Retention : ஐபிஎல் அணிகள் ரிடென்ஷன் செய்த வீரர்கள் முழு விபரம்…

விளம்பரம்

4 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலி ரன் அவுட் ஆனது இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

சுப்மன் கில் 31 ரன்களும், ரிஷப் பந்த் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தை விடவும் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கி உள்ளது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாளை 2 ஆம்நாள் ஆட்டம் தொடர்கிறது

விளம்பரம்

.



Source link