மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்திருந்தபோது நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினர். கான்வே 4 ரன்கள் எடுத்திருந்தபோது அவரது விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் எல்பிடபிள்யூ முறையில் கைப்பற்றி திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அடுத்ததாக வில் யங் உடன் இணைந்த கேப்டன் டாம் லாதம் பொறுப்பாக ரன்களை சேர்த்தார். 28 ரன்கள் எடுத்திருந்தபோது அவரது விக்கெட்டை கைப்பற்றினார் வாஷிங்டன் சுந்தர்.

விளம்பரம்

இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவிந்திரா 5 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெல் ரன் ஏதும் எடுக்காமலும், கிளென் பிலிப்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 61 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்திருந்தபோது நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட டேரில் மிட்செல் 82 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அஜாஸ் படேல் 7 ரன்களில் வெளியேற, 65.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

விளம்பரம்

இதையும் படிங்க – மெகா ஏலத்திற்கு தயாரான அணிகள்… ரிடென்ஷன் தவிர்த்து ஒவ்வொரு டீமிலும் மீதம் உள்ள தொகை எவ்வளவு?

கடந்த போட்டியை போன்று இந்த மேட்ச்சிலும் இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சு கைகொடுத்தள்ளது.  ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

.



Source link